தீர்க்கதரிசியாகிய எலிசா THE PROPHET ELISHA 54-07-23 சகோதரன் போஸ் அவர்களே, உங்களுக்கு நன்றி. நண்பர்களே, நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நாம் ஜெபம் பண்ணலாமா. எங்கள் பரலோகப் பிதாவே, உமது சிங்காசனத்தண்டையில் உம்முடைய பிள்ளைகளுக்கு முன்பாக வருவதற்காகவும், அவர்களை உம்மிடம் சமர்ப்பிப்பதற்காகவும், இன்றிரவு இக்கட்டிடத்தில் உமக்காக காத்துக் கொண்டிருக்கும் யாவருக்கும் ஆசீர்வாதங்களை அனுப்பும்படிக்கு உம்மிடம் வேண்டிக் கொள்ளும்படியாகவும் எங்களுக்குக் கிடைத்த தருணத்திற்காக நாங்கள் இன்றிரவு உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். மாலை வணக்கம், நண்பர்களே. நான் இன்றிரவு நம்முடைய விலையேறப் பெற்ற பரலோகப்பிதாவின் நாமத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும் மறுபடியும் ஊழியம் செய்யும்படியாக, நன்றியுள்ள இருதயத் தோடு வந்திருக்கிறேன். இன்றிரவு நம்முடைய கூட்டத்தில் அவருடைய தெய்வீக ஜீவனின் (Divine Being) ஒரு-ஒரு மகத்தான ஊற்றப்படுதல் இருக்கும் என்று இன்றிரவில் நம்பிக் கொண்டிருக்கிறேன். நாம் வேண்டிக் கொள்ளு கிறதற்கும், நினைக்கிறதற்கும் எல்லாவற்றிற்கும் மிகவும் அதிகமாய் இன்றிரவு தேவன் நமக்கு அருள வேண்டும் என்று ஜெபிக்கிறேன். 2. நான் ஒரு வேதபாகத்தை வாசிக்க விரும்புகிறேன். கூடுமானால் இன்றிரவு கொஞ்சம் முன்கூட்டியே ஜெபவரிசையைத் துவங்க விரும்பு கிறேன், (நாளை சனிக்கிழமை என்றும், அது ஒரு பிஸியான நாள் என்றும் நான் அறிவேன்), அப்பொழுது உங்களால் சீக்கிரமாக வெளியே போக முடியும். இன்றிரவு வழக்கத்தை விட கொஞ்ச அதிக குளிர்ச்சியாக இருப்பதற்காக நாம் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். மேலும் இப்பொழுது, நாளை இரவிலும், ஞாயிறு பிற்பகலிலும், ஞாயிறு இரவிலும்... புத்தகங்களையும், படங்களையும் விற்பனை செய்பவர்களுக்கும், அல்லது அவைகளில் ஒன்றை விரும்புகிறவர்களுக்கும், நாளை இரவு தான் கடைசி சந்தர்ப்பமாகும். நாங்கள் ஞாயிற்றுக் கிழமையில் விற்பனை செய்வது இல்லை. படமோ அல்லது புத்தகமோ நாளை இரவுக்காக... அது அநேகமாக கடைசி முறையாக இருக்கும். அவைகள் அநேகமாக இப்பொழுது தூரமாக விற்பனைக்குப் போய் விடும். ஏன், என்னுடைய கூட்டங்கள் ஒரு வித்தியாசமான அமைப்பில் திரும்பவும் வரும். எனவே நாங்கள் உங்களிடம் கேட்கிறோம், நீங்கள்... நாங்கள் புத்தக விற்பனையா ளர்கள் அல்ல. இல்லை, நீங்கள் அதைக் கொண்டிருக்கும்படியாக அவைகள் உங்களுக்கு நன்மை செய்யும் என்றே நாங்கள் நினைக்கிறோம். அது அப்படியே - நீங்கள் அதை எவ்வளவு மலிவாக வாங்க முடியுமோ அவ்வளவு மலிவானதாக நாம் அதைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. எனவே ஜனங்களுக்கு புத்தகமோ, படமோ தேவையாயிருந்து, அவர்களிடம் பணம் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்களானால், நாம் எப்படியும் அதை அவர்களுக்குக் கொடுக்கிறோம். புரிகிறதா? எனவே உங்களிடம் அவைகளில் ஒன்று உள்ளது என்றும், அது உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாய் இருக்கிறது என்றும் நாங்கள் நம்புகிறோம். 3. இப்பொழுது, இதைக் குறித்து, இங்கே தீர்க்கதரிசிகளைப் பற்றிய (வேத) வாசிப்பானது... என்னுடைய வார்த்தைகள் ஒரு மனிதனுடைய வார்த்தை களாக உள்ளன, இவை தவறிப் போய் விடும், ஆனால் தேவனுடைய வார்த்தைகளோ தவறிப் போக முடியாது. இப்பொழுது, இன்றிரவில், நான் சிறிது நேரம் பேசிக் கொண்டே கடிகாரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் என்னோடு ஜெபிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருக்கால் ஒரு சிறு சாட்சியோ அல்லது ஏதோவொன்றோ... கர்த்தர் அனுமதிப்பாரானால், அடுத்த 20-நிமிடங்களில், ஜெப வரிசையைத் துவங்க முயற்சிக்கலாம். இப்பொழுது, 2 இராஜாக்கள் 3ம் அதிகாரத்தில், நாம் இந்த வார்த்தைகளை வாசிக்கிறோம்: (2 இராஜாக்கள் 3:15) இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்த போது கர்த்தருடைய கரம் அவன் மேல் இறங்கி, இப்பொழுது, அவருடைய வார்த்தையின் வாசிப்பில், கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையோடு அவருடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 4. இன்றிரவு நம்முடைய பாடமானது, பழைய ஏற்பாட்டு பாத்திரமாகிய (character) தீர்க்கதரிசி எலிசாவைக் குறித்ததாகும். நாம் வாசித்த அந்த நேரம் இஸ்ரவேலில் மிகவும் இருண்ட ஒரு சமயமாகும். அது சரியாக இஸ்ரவேலின் இருண்ட காலங்களில், மகத்தான ஒரு இராஜாவாக இருந்த ஆகாப் (ஆட்சி செய்த) ஒரு சமயமாகும் என நான் கூறுவேன். கிறிஸ்தவ சபையானது கொண்டிருப்பதைப் போன்ற 'தேவ கற்பனைகளுக்குக் கண்டிப்பாக கீழ்ப்படிகிறவர்களைப் பிடித்து கைது செய்வதன் (seizure of precisian)' வழியாக அவர்கள் கடந்து வந்தார்கள். ஆகாபு அரசாண்டு கொண்டிருந்த காலம் தான் இஸ்ரவேலின் மிக இருண்ட காலமாக இருந்தது என்று நான் நம்புகிறேன். அப்பொழுது ஆகாப் யேசபேலை விவாகம் செய்து யூத சபைக்குள் விக்கிரக ஆராதனையைக் கொண்டு வந்தான். அவள் தன்னுடைய அந்நிய தேவர்களைக் கொண்டு வந்தாள். அதுவே இருளின் காலங்களில், சபையும் கூட மீண்டும் அந்நிய மார்க்கத்துக்குள் விவாகம் செய்து, சபைக்குள் விக்கிரக ஆராதனையைக் கொண்டு வந்த போது, புறஜாதிகளுக்கு மறுபடியும் சம்பவித்தது. 5. நம்முடைய பாடத்தின் சமயத்தின் போது, அப்போது தான் ஆகாப் மரித்திருந்தான். நீங்கள் அறிந்துள்ளபடி, யேசபேல், யெகூவின் மூலமாக, ஸ்திரீகளுக்குக் காவலாக நியமிக்கப்பட்டிருந்த (eunuchs) சிலரால் ஜன்னலுக்கு வெளியே எறியப்பட்டாள். நீதிமானாகிய நாபோத்தைக் கொன்று, அவனிடமிருந்து திருடப்பட்ட அவனுடைய திராட்சத்தோட்டத்தை எடுத்துக் கொண்டதற்காக, அது போன்றே அவளுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று எலியா தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான் (1 இராஜா. 21:19, 23). இந்த அழகான ஆனால் இருதயத்திலோ துன்மார்க்கமான சிறு இராஜஸ்திரீயாகிய யேசபேலின் சரீரம் முழுவதையும் உண்மையாகவே நாய்கள் சாப்பிட்டன. நாய்கள் சாப்பிட்ட இடத்தில், வீதிகளில் அவளுடைய உள்ளங்கைகளும் மற்றவைகளும் தான் மீதமிருந்தன. பிறகு (ஆகாபின் குமாரனாகிய) யோராம் ஆகாபின் ஸ்தானத்தில் அரசாண்டான். அவன் தன்னுடைய தகப்பனைப் போல் முழுவதும் பொல்லாதவனாக இருக்கவில்லை. அவனுடைய தகப்பன் ஒரு விதத்தில் ஒரு எல்லைக்கோட்டு விசுவாசியாக இருந்தான். நாம் இன்னும் இன்றைக்கும் அப்படிப்பட்ட அநேகரைக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அப்படியே எல்லைக் கோட்டிலேயே இருப்பவர்கள்: காற்று எந்த வழியாக வீசுகிறதோ, ஏன், அவர்களும் அதனோடு கூட போகிறவர்கள். ஆனால் யோராமோ பாகாலின் சிலைகளை அகற்றி விட்டான், ஆனால் அவன் செய்யக் கூடாத பாவங்களில் இன்னும் சிக்கிக் கொண்டிருந்தான் (clave). 6. ... தேசத்து, ஒருக்கால் அவனுடைய தகப்பனைக் குறித்து மோவாபின் இராஜாவுக்கு சிறிது பயம் இருந்தது, ஏனென்றால் ஆகாபிடம் ஒரு பெரிய இராணுவம் இருந்தது. அவனுடைய இராஜ்யபாரத்தின் போது, இஸ்ரவேலர் ஓரளவுக்கு நல்ல ஒற்றுமையோடு இருந்தனர். எனவே அவன் (மோவாபின் இராஜா) பல்லாயிரக்கணக்கான செம்மறியாடுகளை அனுப்பினான், ஏனெனில் மோவாபின் இராஜா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்தான் (sheep master) அநேக. அவன் ஒருவிதத்தில் இரண்டு தேசங்களுக்கு இடையே சமாதானத்தைக் காத்துக் கொள்ள இந்த செம்மறியாடுகளை அனுப்பினான். ஆனால் பிறகு, ஒருவேளை அவனுடைய (ஆகாபுடைய) குமாரன் அவன் ஸ்தானத்தில் இராஜாவான பிறகு, நல்லது, ஒருக்கால் அவன் வந்து அவைகளை மீண்டும் திரும்ப எடுத்துக் கொண்டு செல்ல விரும்பினான். இவ்விதமிருக்க அவனுடைய குமாரன் அவன் தகப்பனைப் போன்று யுத்த வீரனாக இருக்கவில்லை என்பதை அறிந்தான். எனவே இச்சமயத்தில் அங்கே - யூதாவிலோ யோசபாத் இராஜாவாக இருந்தான். யோசபாத் ஒரு நீதிமானாகவும் தேவனுக்கு பயப்படுகிற ஒரு மனிதனாகவும் இருந்தான். 7. இப்பொழுது, இந்த யோராம், மோவாபின் இராஜா தன்னுடன் யுத்தத்தை அறிவிக்கப் போகிறான் என்பதை கண்டு கொண்ட பிறகு, ஏன், அவன் யூதாவுக்குச் சென்று, இந்த மோவாபின் இராஜாவுடன் யுத்தம் பண்ணும்படி செல்ல யோசபாத்தின் எத்தனங்களும் அவனுடன் சேருமா என்று யோசபாத்திடம் கேட்டான். இப்பொழுது, நான் இங்கே சற்று நேரம் அழுத்தமாக கூற விரும்பும் ஒரு கருத்து என்னவென்றால், விசுவாசிகள் தங்களை அவிசுவாசிகளுடன் பிணைத்து விடுவதைப் பற்றியது தான். அது (கிரியை) செய்வதில்லை... ஏன், அது கிரியை செய்வதேயில்லை. தேவன் அதில் பிரியமாய் இருப்பதில்லை. தேவன், 'அவிசுவாசிகளிடமிருந்து வெளியே வாருங்கள்' என்றே சொல்லியிருக்கிறார். பாருங்கள்? இரவையும் பகலையும் ஒன்றாக சேர்க்க உங்களால் இயலாது. விசுவாசத்தையும் அவிசுவாசத்தையும் ஒன்றாக சேர்க்கவும் உங்களால் முடியாது. மேலும்-மேலும் நீங்கள் அவிசுவாசத்தைக் காணும்போது, அது வெறுப்போடு இணைந்தே செல்கிறது. நீங்கள் விசுவாசத்தைக் கண்டு கொள்ளும் போது, அது அன்போடு இணைந்து செல்கிறது. அன்பு விசுவாசத்தை உருவாக்குகிறது. ஏன், விசுவாசமின்றி, உங்களால் அன்பைக் கொண்டிருக்க முடியாது. 8. இப்பொழுது அதன் பிறகு, இந்த விசுவாசியான யோசபாத் ஒரு பெரிய இராஜ்யத்தைக் கொண்டிருந்த யாரோ ஒருவனுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறான், அநேகமாக அவனுடைய நாளில் இருந்த இந்த வாலிப இராஜாவைக் குறித்த கௌரவத்தினால், அவன் அதைச் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தேவனிடம் ஆலோசனை கேட்பதற்கோ அல்லது தேவனிடம் கேட்கும் முன்பாக, அவன் சத்துருவுடன் யுத்தம் பண்ணும்படி செல்ல தன்னுடைய இராணுவத்தைக் கூட்டினான், அவன் மோவாபியரை விடவும் மோசேமான அல்லது சீர்கெட்ட அதேபோன்ற ஒரு சத்துருவுடன் அவன் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்தான் என்பதை உணரவில்லை. சென்ற உலகப் போரின் போதும் நாம் அதே காரியத்தையே செய்தோம் என்று நான் எண்ணுகிறேன். இதன் பேரில் பேசுவதற்கு இன்றிரவு நமக்கு நேரம் இருக்க விருப்பமுண்டு, ஆனால் நமக்கு நேரமில்லை. அதாவது, நாம் நம்மை ரஷ்யாவுடன் பிணைத்துக் கொண்டு ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்த போது 'இருவர் மனம் ஒருமித்திருந்தாலொழிய எவ்வாறு ஒருமித்து நடந்து செல்ல முடியும்?' பாருங்கள்? அவர்கள் - நாம் சிலுவையைப் புறக்கணித்து விட்டோம், அதற்காக நாம் இரண்டு மடங்கு சிலுவையைப் பெற்றுக் கொண்டோம். இப்பொழுது, நாம் அவர்களிடம் அனுப்பின அதே சாதனத்தை திருப்பி நம்மிடமே அவர்கள் வீசி எறியப் போகிறார்கள் என்பது போன்று தோன்றுகிறது. நல்லது, உலகம் போகிற வழி அதுதான், ஆனால் ஒருநாள், அங்கே நீதியின் இராஜா வருவார், அதற்கு மேலும் யுத்தம் இருக்காது. அதற்கு மேல் துக்கம் இருக்காது, எல்லாம் முடிந்து விடும். தானியேல் கண்ட மலைகளிலிருந்து பெயர்ந்து விழும் கல் வரும் மட்டுமாக, உலகத்தின் இராஜ்யங்கள் சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் இன்னும் இருக்கிறது. அவைகள் தன்னுடைய இராஜ்யங்கள் என்று சாத்தான் கூறினான்; இயேசுவும் அதை ஒப்புக் கொண்டார். அவர் அவனை வணங்கினால், அவைகளை இயேசுவுக்குக் கொடுப்பதாக அவன் வாக்களித்தான். இயேசு எப்படியும் அவைகளுக்கு சுதந்தரவாளியாய் இருப்பார் என்பதை அறிந்தவராய், 'எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே. 'உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக' என்று எழுதியிருக்கிறதே' என்றார். 9. இப்பொழுது, இந்நேரத்தில், இந்த அருமையான மனிதன், அவன் நோக்கிப் பார்த்தபோது, ஒரு பிரகாசமான பக்கம் அங்கே இருப்பதைக் கண்டன் நிமித்தமாக, தேவனிடம் ஆலோசிப்பதற்கு முன்பாக, அவன் இந்த அவிசுவாசியோடு தன்னை சேர்த்துக் கொண்டான். நான் - இன்றிரவு இதைக் குறித்து தொடர்ந்து அதிக நேரம் பேச நேரமிருக்கிறது... அநேக நல்ல கிறிஸ்தவ இருதயங்கள், நீங்கள் வழக்கமாகப் போகிற சிறியதும் பழையதுமான நாட்டுப்புற சபையை மிஞ்சி விடும் ஒரு புதிய சபையை அவர்கள் சமுதாயத்தில் கட்டின போது, அவர்களும் அதே காரியத்தையே செய்துவிட்டார்கள். அநேகமாக, நீங்கள் சற்று மேலான வகுப்பு ஜனங்களாக உங்களை எண்ணிக் கொண்டு, அங்கே சென்றீர்கள், ஒருகாலத்தில் நீங்கள் சேர்ந்திருந்த பழமை நாகரீகமான சபையை விட்டு விலகி, நீங்கள் அங்கு சென்று, உங்களை நீங்களே அதனுடன் இணைத்துக் கொண்டீர்கள். அப்போது இந்த யோசபாத்துக்கு நேரிட்ட அதே தொல்லைக்குள் நீங்களும் போய் விடுகிறீர்கள். எப்படியும், அவர்கள் தங்கள் இராணுவங்களை ஒன்றாகக் கூட்டினார்கள். ஒரு விசுவாசி தன்னுடைய சிருஷ்டிகரோடுள்ள தொடர்பை விட்டு விட்டு வெளியே வருவதைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் திசைகாட்டும் கருவியை ஏழு நாட்களாக தயார் செய்து, ஏதோமின் இராஜாவையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு, இந்தப் பெரிய மோவாபியரின் கூட்டத்தை எதிர்கொள்ளும்படி அங்கே வெளியே வனாந்தரத்தில் சென்றனர். 10. இப்பொழுது, அவர்கள் தேவனிடம் கூட ஆலோசனைக் கேட்காமல் இத்தனை வேகமாக தூரமாக சென்று விட்டனர். ஏழு நாட்கள் ஆனபோது, நல்லது, தங்கள் கைவசம் தண்ணீர் இல்லை என்று கண்டார்கள். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் எதுவும் இல்லாதிருந்தது. அவர்கள் தங்கள் கால் நடைகளுடனும், தங்கள் மிருக ஜீவன்களுடனும் அங்கே வெளியில் இருந்தார்கள், அவர்களுக்கு தண்ணீர் இல்லாமலிருந்தது. அது ஏறக்குறைய அப்படியே அவர்களின் முடிவாக இருந்தது போன்று காணப்பட்டது. இப்பொழுது, அதையே தான் நாமும் செய்கிறோம். சில சமயங்களில் நாம் திடீர் கோப வெறி கொண்டு, தேவனைக் குறித்து சிந்திக்காமல், அதற்காக ஜெபிக்காமல், அதைச் செய்யலாமா செய்யக் கூடாதா என்று கர்த்தரிடம் கேட்காமல் ஏதோவொரு இடத்திற்குப் புறப்பட்டு சென்று விடுகிறோம், அப்பொழுது நம்முடைய ஆசீர்வாதங்கள் தடைபடுவதை நாம் காண்கிறோம். பிறகு சில சமயங்களில் நாம், 'நல்லது, நான் ஏன் அதிகமான ஆசீர்வாதங்களைக் கொண்டிருக்க முடியவில்லை என்று வியப்பாயுள்ளதே' என்று வியப்படைகிறோம். நீங்கள் கவனிக்காமல் இருந்து, உங்களுடைய ஜெப ஜீவியத்தை விட்டு விடுகிறீர்கள். நீங்கள், 'நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன்' என்று கூறலாம். நல்லது, நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்பதற்கு எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் அது இன்னும் கூடுதல் அடையாளமாய் உள்ளதே. தினமும் வேதம் வாசியுங்கள். தினமும் ஜெபியுங்கள். தேவனிடம் முதலில் அதைக் குறித்து ஆலோசிக்காமல், அதிக வெறுப்பூட்டும் நேரத்திலோ அல்லது மிகத் துரிதமாகவோ எந்தத் தீர்மானமும் செய்யாதீர்கள். 'பிதாவே, நான் இதைச் செய்யலாமா?' என்று அவரிடம் கேளுங்கள். 'நான் இதைச் செய்வது உமக்குச் சித்தமா?' என்று அவரிடம் கேளுங்கள். அப்போது பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் என்ன பேசுகிறார் என்று பாருங்கள். அவர் ஒரு தரிசனத்தை உங்களுக்குத் தராமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரிடம் உத்தமமாயிருந்து கேட்டால், நீங்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஏதாவதொரு வழியில் அவர் உங்களோடு பேசுவார். 11. அதன்பிறகு, ஆபத்து வேளை வந்த போது தான், இது வரை யார் (தங்களுடைய இருதயத்தில்) ஒரு விசுவாசியாக இருந்தது என்று காண்பித்தது என்று நாம் காண்கிறோம். அது தான் (விசுவாசியான) யோசாபாத். அவன், 'நல்லது, நாம் எந்த தண்ணீரும் இன்றி இங்கே இருக்கிறோமே' என்றான். மற்ற இராஜாவோ, 'மோவாபியர்கள் நம்மை இங்கே வரவழைத்து, இப்பொழுது அவர்கள் நம் அனைவரையும் இங்கே வெளியே வைத்து கொல்லப் போகின்றனர் என்று நான் நினைக்கிறேன்' என்றான். ஆனால் விசுவாசியாகிய யோசபாத்... இப்பொழுது, ஒருவிதத்தில் அவனுக்கு சுய நினைவு வந்தது; அவன், 'நாம் கர்த்தரிடம் விசாரிக்கும்படி எங்காகிலும் ஒரு தீர்க்கதரிசி இல்லையா?' என்று கேட்டான். அது ஒரு நல்ல அருமையான கருத்தாகும், நீங்களும் அவ்வாறு எண்ணவில்லையா? ஒரு... 'நாம் இங்கே இந்த இக்கட்டு நேரத்தில் இருக்கிறோம், நாம் சாகப் போகிறோம் அல்லது தோற்கடிக்கப்படப் போகிறோம், என்றிருந்தால் நாம் இந்தக் காரியத்தைக் குறித்து கர்த்தரிடம் விசாரிக்க முடியுமா? நாம் கர்த்தரிடம் விசாரிக்க வேண்டாமா?' என்றான். 12. நல்லது, ஒரு தேசம் அல்லது ஒரு இராணுவம் ஒரு இக்கட்டு நேரத்தில் கர்த்தரிடம் விசாரிப்பார்களானால், ஒரு இக்கட்டு நிலையில் ஒரு புற்று நோய் உங்களுக்கு ஏற்படும் போது, அதைக் குறித்து என்ன? ஒரு இக்கட்டு நிலையில் காசநோய் உங்களுக்கு ஏற்படும் போது அதைக் குறித்து என்ன? ஒரு இக்கட்டு நிலையில் உபத்திரவங்கள் உங்களுக்கு ஏற்படும் போது, முயற்சி செய்வதை நிறுத்தி விடாதீர்கள்; நாம் அதைக் குறித்து கர்த்தரிடம் விசாரித்து, அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். பாருங்கள்? ஒருக்கால் நீங்கள் சொல்லலாம், 'நல்லது, நான்... நான் ஒரு குடிகாரன். நான் ஒரு வேசி. நான்... நான்- நான் என் ஜீவியம் முழுவதும் சபித்து இருக்கிறேன்' என்று, முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள். நாம் இப்பொழுதே அதைக் குறித்து கர்த்தரிடம் விசாரித்து, அவர் அதைக் குறித்து என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம். 'நல்லது, சகோ.பிரன்ஹாமே, நான் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்து, பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள 6-வருடங்களாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் அவர் என்னிடம் வரவில்லை' எனலாம். நல்லது, இன்றிரவு நாம் மீண்டும் முயற்சித்து, கர்த்தர் என்ன சொல்லுவார் என்று பார்க்கலாம், நாம் ஒவ்வொன்றையும் வழியை விட்டு அகற்றினால் அவர் எப்பொழுதுமே பிரியமாயிருக்கிறார். 13. நல்லது, அங்கிருந்த ஒருவன், 'ஆமாம், ஒரு உண்மையான தீர்க்கதரிசியாகிய எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்த எலிசா இங்கே இருக்கிறார். அவர் இங்கு எங்கே ஜீவிக்கிறார் என்பது நமக்குத் தெரியும், ஒருக்கால் இந்த வனாந்தரத்தில் எங்காகிலும் இருப்பார். என்னே, அவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி' என்றான். 'எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்தவன்' என்றான். இப்பொழுது, அந்தப் பழமொழி இவ்வாறு கூறுகிறது, 'உன்னுடைய சகாக்களை (company) என்னிடம் காட்டு, அப்பொழுது நீ யாரென்று நான் உனக்குச் சொல்லுவேன்' என்று. அது ஏறக்குறைய சரிதான். ஒரே சிறகுள்ள பறவைகள் ஒன்றாயிருக்கும். 14. இங்கே சில காலங்களுக்கு முன்பு, நான் தென் ஆப்பிரிக்காவில் இருந்தேன். நீங்கள் அறிந்துள்ளபடி, அங்கே ஒரு மகத்தான கூட்டம் இருந்தது, எப்படியாக கர்த்தர் ஆசீர்வதித்தார், பத்தாயிரக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டனர், அடையாளங்களும் அற்புதங்களும் பரவிச் சென்றன- தினமும் செய்தித்தாளின் 2 அல்லது 3 பக்கங்கள். அங்கே இருந்த ஒரு-ஒரு குற்றங்காண்பவர் எனக்கு எழுதினார். அவர் சொன்னார்... ஒரு சில நாட்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அது எவ்வாறு நிர்வாகத்திற்கும் மற்றவைகளுக்கும் சென்று சேர முடிந்தது என்பதை அறியும்படி நான் விரும்புகிறேன்... ஆனால் அது என்னிடம் கிடைத்த போது, அது சொன்னது, 'சரி, பிரசங்கி பிரான்ஹாம் அவர்களே, உங்கள் சகாக்களை என்னிடம் காட்டுங்கள்; அப்பொழுது நீங்கள் யாரென்று நான் உங்களிடம் சொல்லி விடுவேன்' என்றது. 'உங்களுக்குப் பின்னால் இருக்கும் 90 சதவீதம் பேர் பெந்தெகோஸ்தேயினரே' என்றார். நான், 'நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அது சரியே. அது சரி தான். அது மிகவும் சரியே... நான்...' என்றேன். அவர், 'உங்களுக்குப் பின்னால் இருக்கும் 90 சதவீதம் பேர் பெந்தெகோஸ்-தேயினர் தான். அவர்கள் இப்படிப்பட்ட காரியத்தை விசுவாசிக்கிறார்கள்' என்றார். நல்லது, நிச்சயமாக. அதாவது விசுவாசிகள் எங்கிருக்கிறார்களோ அங்கு தான் கர்த்தர் வருகிறார். அதாவது அவர் வரக்கூடிய ஒரே காரியம் விசுவாசிகளிடம் தான். 15. அதன் பிறகு, ஆனால் அது தான் அது. எலியா, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், எலிசா, அந்த மகத்தான பெரிய தீர்க்கதரிசியாகிய எலியாவுடன் நட்பு வைத்திருந்தான். எலியா அவனை எவ்விதம் அழைத்தான் என்றும், எவ்விதம் அவன் மேல் தன்னுடைய சால்வையை (mantel) எறிந்தானென்றும், அவன் கில்காலிலும் அனேக இடங்களிலும் எவ்வாறு அவனைப் பின்தொடர்ந்தான் என்றும் நீங்கள் நினைவு கூருவீர்களானால்; நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புவது என்னவென்றால், எலிசா தான் எலியாவுக்குப் பதிலாக தீர்க்கதரிசியாக அழைக்கப்படப் போகிறான் என்பதை அவன் எவ்வாறு அறிந்து கொண்டான் என்பதாகும்... ஏன், எலிசா வழியில் தன் பின்னால் ஒரு இடத்திலிருந்து பின்னொரு இடத்திற்கு வருவதைத் தடுக்க எலியா ஏறக்குறைய முயற்சித்தான், ஆனால் எலிசா, 'நான் உம்மை விடப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும், ஒரு போதும் மரித்துப் போகாத உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்' என்றான். எனக்கு அது பிடிக்கும். ஒரு மனிதன் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்து தன்னுடைய கண்களை பரலோகத்தை நோக்கி வைத்துக் கொண்டு இருக்கும் போது, அதே விதமாகவே உங்கள் கண்களையும் வைத்திருங்கள். யாருக்காகவும் வேறு எதற்காகவும் அவரை விட்டு விடாதீர்கள். அப்படியே உங்கள் கண்களை கிறிஸ்துவின் மேல் வைத்திருங்கள். 16. அவர்கள் தீர்க்கதரிசிகளின் பள்ளி வரை சென்றனர், அந்நாளில் அங்கே மேலே இருந்த மகத்தான வேதாகம கல்லூரி. பிறகு, அது அதிகமாக வேதாகம கல்லூரி போல் அல்ல, அநேகமாக நம்முடைய சில நவீன வேதாகம கல்லூரிகளைப் போலல்ல. அவர்கள் யாரோ ஒருவனை கொஞ்சம் கூழ் காய்ச்சும்படிக்கு கொஞ்சம் காய்கறிகளைக் (peas) கொண்டு வரஅனுப்பினர், ஒருவன் போய் பேய் கொம்மட்டிக் காய்களை மடிநிறைய அறுத்துக் கொண்டு வந்து, அவைகளை... ல் இட்டான். அவனுக்கு நல்ல காய்கறிகளுக்கும் (peas) அல்லது பேய்கொம்மட்டி காய்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியவில்லை. அவன் பெரிய அளவில் ஒரு தீர்க்க தரிசியாக இருக்கவில்லை, நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஆனால் ஏறக்குறைய அதே விதமாகத்தான் இன்றும் இந்த வேதாகம கல்லூரிகளில் சில உள்ளன. அவர்களுக்கு மத வெறித்தனத்திற்கும் (fanaticism) பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியவில்லை. அது அப்படியே ஏறக்குறைய அதேவிதமாகத் தான் இருக்கிறது. ஆனால் இவ்வாறிருந்த போதிலும் நான் கவனிக்கிறேன், தீர்க்கதரிசிகளில் ஒருவன் திரும்பி வந்த போது, 'அங்கே பானையில் சாவு இருக்கிறது, பானையில் சாவு இருக்கிறது' என்றான். எலியா (சகோ.பிரன்ஹாம் எலிசா என்று கூறுவதற்குப் பதிலாக எலியா என்று கூறுகிறார்-தமிழாக்கியோன்.) 'கவலைப்படாதீர்கள்' என்றான். அவன் சென்று கை நிறைய மாவை எடுத்து, அதைப் பானைக்குள் போட்டு, 'இப்பொழுது, நீங்கள் விரும்புகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள்' என்றான். 17. அந்த மாவானது போஜன பலியிலிருந்த வந்ததாகும். அந்த போஜன பலியானது அங்கிருந்த கையால் இயக்கப்படும் அரவை இயந்திரங்களைக் கொண்டு (burrs) அரைக்கப்பட வேண்டியதாய் இருந்தது, ஒவ்வொரு அரவை இயந்திரமும் (every burr) அப்படியே ஒரே விதமாக இருக்கும். அது போஜன பலியை பரிபூரணமாக அரைக்கிறது: அரவை இயந்திரங்கள் அப்படியே ஒரே விதமாக இருக்கிறது, அரைக்கப்பட்ட ஒவ்வொரு மாவும். போஜன பலியானது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சாவு அதில் இருக்கும் போது, கிறிஸ்து அதற்குப் பதிலாக அதில் போடப்படுகிறார், அப்போது மரணம் மீண்டும் ஜீவனுக்குத் திரும்புகிறது, நீங்கள் அதைக் காணவில்லையா? எனவே அதே கூழ் தான்... அவன், 'அதை வெளியே கொட்டி விட்டு, நாம் வேறு கொஞ்சம் கொண்டு வரலாம்' என்று கூறவில்லை. அப்படியே அந்த அதே ஒன்றையே எடுத்துக் கொள்கிறான். எனவே ஒரு புற்று நோயோ அல்லது மருத்துவர்களாலோ மருத்துவ விஞ்ஞானத்தினாலோ கட்டுப்படுத்த முடியாத ஏதோவொரு வியாதியோ உங்கள் ஜீவியத்தில் வந்திருக்கும் போது, முயற்சியை விட்டு விடாது இருங்கள். போஜன பலியானது இன்னும் நம்முடையதாயிருக்கிறது: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். விசுவாசத்துடன் கிறிஸ்துவை உங்கள் ஜீவியத்தில் போடுங்கள், அது ஒவ்வொரு தடவையும் மரணத்திலிருந்து ஜீவனுக்குத் திரும்பும். அது சற்றும் தவறிப்போக முடியாது, ஏனெனில் அது கர்த்தராகிய இயேசுவாகும். 18. எலியா, கிறிஸ்துவினுடைய நிழலாட்டத்தை முன்கூட்டியே கண்டான், இந்த மாவானது அவரைத் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அவன் அறிந்து கொண்டான், அவர் அசைவாட்டும் பலியாகவும் (wave offering), ஏறெடுத்துப் படைக்கும் பலியாகவும் (heave offering), போஜன பலியாகவும் இருந்தார். எல்லா பலிகளும் கிறிஸ்துவுக்கு தொடர்புடையதாக இருந்தன. எனவே அவன் ஒரே விதமாக (ஒரே அளவாக) அரைக்கப்பட்ட மாவை எடுத்து, அதைப் பானையில் போட்டான்: நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். கிறிஸ்து அந்தப் பானையில் இருந்த மரணத்தின் ஸ்தானத்தை எடுத்து ஜீவனைக் கொண்டு வந்தது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, அவ்வண்ணமாகவே அவர் இன்றைக்கும் இருப்பார், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற அடிப்படையின் பேரில் அவர் எடுக்கப்படும்போது, அவர் ஒவ்வொரு முறையும் மரணத்தை ஜீவனுக்கு மாற்றி விடுவார். இப்பொழுது, பிறகு அவர்கள் இந்த பள்ளி வரை சென்றார்கள். பிறகு எலியா எலிசாவிடம், 'நீ இங்கே இரு, ஏனெனில் நான் யோர்தானுக்குப் போகிறேன்' என்று கூறினான். 19. அந்தப் பிரயாணம் மூன்று கட்டங்களாக இருந்தது என்பதைக் கவனியுங்கள்: அவைகளில் ஒன்று கில்காலுக்கும் மற்றொன்று அங்கே இருந்து தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கும், அடுத்த ஒன்றானது அங்கிருந்து யோர்தானுக்குமாக இருந்தது. இப்பொழுது, யோர்தான் தான் அவனுடைய கடைசி இடமாக இருந்தது, அவன் கவனிக்க வேண்டியிருந்த கடைசி நேரம். நாம் கடந்து வந்து கொண்டிருக்கும் சபைக்காலங்களை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. முதலாவது கில்காலிலிருந்து... சபையானது இருண்ட காலங்களிலிருந்து வந்த பிறகு, அது லூத்தரின் சீர்திருத்தம் வழியாக வந்தது. அதனுடைய இரண்டாவது கட்டம் வருகிறது, அவர்கள் அதை என்னவென்று அழைக்கிறார்கள், இரண்டாவது ஆசீர்வாதம் அல்லது கிருபையின் இரண்டாவது செயல்: ஜான் வெஸ்லி வழியாக பரிசுத்தமாக்கப்படுதல். பிறகு நாம் யோர்தானுக்கு வந்து, மரித்து அதன் பிறகு பரிசுத்தாவியைப் பெற்றோம். இப்பொழுது... தாண்டிச் சென்று விட்டோம்... 20. எலியா அதைத் தாண்டிச் சென்ற பிறகு, மறுபக்கத்திற்கு சென்று, அவன் வாலிப தீர்க்கதரிசியிடம் கூறினான்... இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவையும் சபையையும் பரிபூரணமாக சித்தரிக்கிறார்கள். எலியா சபையிடம் அதிகாரத்தை விட்டு விட்டுப் போகிறான், அது சபையிடம் அதிகாரத்தை விட்டுச் சென்றிருக்கும் கிறிஸ்துவின் ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் சபையானது லூத்தரின் காலத்தின் வழியாகவும், மெதோடிஸ்டு காலம் வழியாகவும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் வழியாகவும் வந்து, ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சுயத்திற்கு மரிக்கவும் வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, அவர்கள் யோர்தானைக் கடந்து விட்டனர். அவர்கள் மேலே மலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். எலிசா சுற்றிலும் திரும்பி, 'நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? நீ பொறுமையாக என்னை ஒவ்வொரு இடத்திலிருந்தும் பின்பற்றி வந்து கொண்டிருக்கிறதைக் காண்கிறேன், திரும்பிச் செல்லவில்லை. நீ தொடர்ந்து வர வேண்டுமென்று முடிவு செய்து விட்டாயா?' என்றான். எலிசா, 'உம்முடைய ஆவி என்மேல் கட்டாயம் இரண்டு மடங்காக வர வேண்டும்' என்றான். அவ்விதமாகத் தான் கேட்க வேண்டும். பாருங்கள்? அதிகமாகக் கேளுங்கள். எனவே தேவன் அதை அந்தவிதமாகத்தான் கொடுக்க விரும்புகிறார். அப்படியே கொஞ்சம்... தொல்லை... ஜனங்கள் சொல்லுகிறார்கள், 'நான்-நான் பிதாவிடம் அதிகமாகக் கேட்கிறேன்...' என்று. ஓ, என்னே, அவரிடம் கேட்க பயப்படாதீர்கள்: உங்களால் கேட்க முடிந்த எல்லாவற்றையும் கேளுங்கள். பெற்றுக்கொள்ளும்படியாக நீங்கள் கொண்டு இருக்கும் விசுவாசம் எவ்வளவோ அவ்வளவு அதிகமாக அவர் உங்களுக்குக் கொடுக்கப் பிரியப்படுகிறார். அவருடைய கையிருப்பு தீர்ந்து போகாது. தேவன் அதிகமான ஆசீர்வாதங்களைக் கொண்டிருக்கிறார். 21. ஏறக்குறைய அவ்வளவு அளவிலான ஒரு சிறு மீன் வெளியே சமுத்திரத்தின் மத்தியில் இருந்து கொண்டு, 'நான் இந்தத் தண்ணீரை சிக்கனமாக குடிப்பது நல்லது; ஒரு நாளில் நான் இதைத் தீர்த்து விடப் போகிறேன்' என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஓ, என்னே... அது... ஏன், என்னே... தேவன் உங்களுக்காக வைத்து இருக்கும் ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடத்தக்கது எதுவுமேயில்லை. எகிப்தின் மகத்தான களஞ்சியத்தின் அடியில் உள்ள ஒரு சிறு எலி, 'நான் தினமும் கொஞ்சம் கோதுமை மணிகளை சாப்பிடுவதே நல்லது, ஏனெனில் அது குளிர் காலத்தில் கட்டாயம் மீதியிருக்காது' என்று கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏன், அது ஆயிரம் வருடங்கள் உயிரோடிருந்தாலும் அதை ஒரு போதும் சாப்பிட்டு (முடிக்க) முடியாது. நீங்கள் இங்கே பூமியில் 10 மில்லியன் வருடங்கள் ஜீவித்தாலும், தேவன் சேமித்து வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை உங்களை விட்டு (எடுத்து), அதை நீங்கள் பருகாதிருக்கும்படி செய்ய அவரால் முடியாது. உங்களுக்காக விடப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் இன்னும் அதிகமாக இருக்கும், அவர் வற்றாத ஜீவ நீரூற்றாக இருக்கிறார். நீங்கள் உங்களையே அவரில் நடும் போது, இந்த நீரூற்றின் மூலமாக, அது நீர்க் கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப் போலிருக்கும். எவ்வளவு மகிமையானது. அவர் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தமது ஜனங்கள் இடமாக உந்தித்தள்ளிக் கொண்டு அவர்களுக்கு அபரிமிதமாக கொடுக்க எவ்வளவாய் விரும்புகிறார். 22. இந்தத் தீர்க்கதரிசி, மேலே போய்க் கொண்டிருந்தான்... அவன், 'உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு தான் எனக்குத் தேவை' என்றான். 'நீ கடினமானதைக் கேட்டிருக்கிறாய், ஆனால் என்னைக் கவனித்துக் கொண்டே இரு. நான் போகும் போது நீ என்னைக் கண்டால், அது உன் மேல் வரும்' என்றான். இப்பொழுது, அது எப்படி சபைக்கு மாதிரியாய் உள்ளது? ஒரு சமயம் அங்கே ஒரு- ஒரு வாலிபன் வந்து - அல்லது ஸ்திரீ இயேசுவிடம் வந்து, 'ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும் போது, என் குமாரர்களில் ஒருவன் ஒரு பக்கத்திலும், ஒருவன் வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி (அருள் செய்ய வேண்டும்)' என்றாள். 'ஏன்,' அவர், 'நான் குடிக்கும் பாத்திரத்தில் (cup) உங்களால் குடிக்கக் கூடுமோ? (உபத்திரவங்கள், கசப்பான வண்டல்கள் (dregs), மரணம்)?' என்று கேட்டார். 'கூடும்' 'நான் பெறும் ஸ்நானத்தை பெற உங்களால் கூடுமா?' என்றார். அவள், 'ஆம், கர்த்தாவே?' என்றாள். அவர், 'உங்களால் கூடும். ஆனாலும், வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் (உட்கார்ந்திருக்கும்படி) அருளுவது என் காரியமல்ல' என்றார். இப்பொழுது, இயேசு, '... நான் சபைக்குச் செய்கிற கிரியைகளைத் (தானும் செய்வான்), இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் நீங்கள் செய்வீர்கள்' என்றார். இப்பொழுது, அது தரத்தில் (quality) பெரியவைகளாக இருக்க முடியாது. அது எண்ணிக்கையில் அதிகமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர் இயற்கையை நிறுத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், வியாதியஸ்தர்களை சுகமாக்கினார். செய்யக் கூடிய ஒவ்வொன்றையும் அவர் செய்து விட்டார். பாருங்கள்? மரித்தவர்களுக்கு திரும்ப ஜீவனைக் கொடுத்தார் மற்றும் ஒவ்வொன்றும். எனவே தரத்தில் செய்யக் கூடிய அதிகமான எதுவும் இருக்க முடியாது, ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக. 'நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற படியினால், நான் செய்கிற இந்தக் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இன்னும் அதிக கிரியைகளையும் (பெரிய கிரியைகளையும்) நீங்கள் செய்வீர்கள்.' 23. இப்பொழுது, அந்த ஆசீர்வாதமானது வாக்களிக்கப்பட்ட பிறகு இந்த வாலிப போதகரை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவன் சரியாக எலியாவின் மேல் எப்படியாக தன்னுடைய கண்களை வைத்திருந்தான். யாராவது ஒருவர், 'எலியாவே, இங்கே நோக்கிப் பார்' என்று கூறியிருந்தாலோ, அல்லது இங்கே ஏதோவொரு கூச்சல் கேட்டு இருந்தாலும், எலிசா தன்னுடைய கண்களை சரியாக எலியாவின் மேல் வைத்திருந்தான் என்று உங்களிடம் கூறுகிறேன். அவன் அந்த இரட்டிப் பான பங்கைத் தான் விரும்பினான். இன்றிரவு அந்த இரட்டிப்பான பங்கு உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்கள் கண்களை இயேசுவின் மீது வைத்திருங்கள். பிசாசு சொல்லுவதிலோ, குற்றங்கண்டுபிடிப்பவர் சொல்லுவதிலோ, அவிசுவாசிகள் சொல்லுவதிலோ எந்தக் கவனமும் செலுத்த வேண்டாம். உங்கள் கண்களை கல்வாரியின் மீது வைத்து, 'கர்த்தாவே, நீர் அதை வாக்களித்திருக்கிறீர்' என்று கூறுங்கள். 24. அப்போது, ஒரு- ஒரு...?... ஒரு அக்கினி ரதமும் ரதங்களின் குதிரைகளும் கீழே வருகிறது- எலியா அதன் மேல் ஏறினான், அவன் மேலே பரலோகத் திற்குள் செல்கையில், தன்னுடைய சால்வையை அல்லது அது என்னவாக இருந்ததோ அதைக் கழற்றி, பின்னால் எலிசாவிடத்தில் எறிந்தான். எலிசா அந்த சால்வையைப் பிடித்து, அதை தன்னுடைய சொந்த தோள்களில் போட்டுக் கொண்டு, யோர்தானுக்கு நடந்து சென்றான். எலியா செய்த அதே காரியம், அவன் இரட்டிப்பான தன்னுடைய சால்வையை ஒன்றாக வைத்துக் கொண்டு, யோர்தானை அடித்து, 'எலியாவின் தேவன் எங்கே?' என்றான். அவைகள் வெவ்வேறாய், இரண்டு கூறுகளாகப் பிரிந்தது. எலிசா எட்டு மிகச்சிறந்த அற்புதங்களைச் செய்தான், எலியா செய்தான், எலிசாவோ பதினாறு மிகச்சிறந்த அற்புதங்களை தன்னுடைய நாட்களில் செய்தான். 25. கவனியுங்கள், இப்பொழுது, எலியா மேலே போனது போல, இயேசு தம்முடைய ஆவியை இரண்டு மடங்காக விசுவாசிகளுக்கு வாக்களித்தார்: 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்; அவைகளைப் பார்க்கிலும் பெரியவைகளையும்கூட.' பெந்தெகோஸ்தே நாளில்... இயேசு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளில் அவர் மேலே சென்ற போது, பெந்தெகோஸ்தே நாளில், அவரின் மேலிருந்த அதே பரிசுத்த ஆவி, சபையின் மீது மீண்டும் வருகிறது. நான் இன்று வியக்கிறேன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கொண்டிருப்பதாக உரிமைகோரும் ஜனங்கள், தாங்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களின் பாத்திரங்களின் ஓரங்களை முத்தமிடுவதாக உரிமை கோருபவர்கள், நாம் காரியங்கள் இந்த விதமாகப் போவதைக் காணும் போது, நாம் எவ்வளவாக நம்முடைய சமாதானத்தைப் பற்றிக் கொண்டு இருக்க முடியும்? நாம் அபிஷேகம் பண்ணப்படும் இந்த பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, 'இயேசு கிறிஸ்துவின் மேலிருந்த தேவன் எங்கே? ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலிருந்த தேவன் எங்கே?' என்று கூற வேண்டிய நேரம் இதுவே. அதுவே ஆசீர்வாதங்கள். 26. அங்கே அந்தப் பெரிய ஆபத்து வேளையில், அவர்கள் திரும்பி வரும் யாரோ ஒருவனைக் கொண்டிருந்தனர். எலியா போய் விட்ட போதிலும், அவனுடைய கைகளுக்கு தண்ணீர் வார்த்த, அவனுடைய ஆவியின் இரண்டு மடங்கைக் கொண்டிருந்த ஒருவன் இங்கே இருந்தான். எனவே இன்றுள்ள வியாதிப்பட்ட பாவமான உலகமானது, அவருடைய ஆவியின் இரட்டிப்பான பங்கை உடையதாயிருக்கும் ஜீவிக்கிற தேவனுடைய ஒரு உண்மையான சபையை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த சமயத்தில் நாம் என்ன செய்யக் கூடும்? சகோதரனே, நம்முடைய பதிலானது, 'அடுத்த ஜனாதிபதி யாராயிருக்கப் போகிறார்?' என்றோ அல்லது ஏதோவொரு வேத சாஸ்திரமாகவோ இருக்கக் கூடாது. நாம் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவாகிய ஜீவிக்கிற தேவனை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் ... ஐக் கண்டுபிடிக்கும்படியாக அவன் போகிறான். 27. எலிசா, ஒருவேளை, அங்கே தன்னுடைய ஒரு-ஒரு வேதாகமத்தையோ அல்லது ஒரு புஸ்தக சுருளையோ வாசித்துக் கொண்டு எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கிறான்... அவனுடைய வேலைக்காரனாகிய கேயாசி, '3-பெரிய இராஜாக்கள் உம்மைச் சந்திக்க இங்கே வருகிறார்கள்' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இப்பொழுது, வழக்கமாக இந்நாளின் மெருகேற்றப்பட்ட நம்முடைய குருமார்களில் ஒருவர் போய்...?... தன்னுடைய மிகச்சிறந்த சூட்டையும் மற்றும் எல்லாவற்றையும் அணிந்து கொண்டு, அங்கு சென்று அவனைச் சந்திக்கப் போயிருப்பார், ஆனால் எலியா அப்படிப்பட்டவனல்ல. அவன் தன்னால் உபயோகிக்கக் கூடிய நல்ல இலக்கணம் எல்லாவற்றைக் கொண்டும் நடந்து போயிருப்பான், அவன் அதை உபயோகித்திருப்பான். ஆனால் எலியா (எலிசா - மொழிபெயர்ப்பாளர்) வெளியே நடந்து வந்தான், அவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்கள். அவன், 'உம்முடைய தாயாரின் தேவனிடத்திற்கும் உம்முடைய தகப்பனின் தேவனிடத்திற்கும் நீ ஏன் போகக் கூடாது? நீ ஏன் என்னிடம் வந்தாய்?' என்றான். ஓ, என்னே, அவன் உண்மையாகவே அவர்களைக் கிழித் எறிந்தான். 'நீ ஏன் என்னிடம் வந்தாய்? உன்னுடைய அந்நிய விக்கிரகங் களிடம் நீ ஏன் போகக் கூடாது?' என்றான். அவன், 'நான் யோசபாத் இங்கிருக்கிறார் என்பதற்கு மரியாதையைக் கொடுத்திராவிட்டால், உம்மைப் பார்க்கவும் கூட செய்ய மாட்டேன்' என்றான். என்னே... நாம் அழைக்கிறபடி, அவன் ஒருவிதத்தில் எரிச்சல் (dandruff up) அடைந்தான், இல்லையா? அல்லது பரிசுத்த ஜனங்களாகிய நாம் அதை அழைக்கிறது போல, அவன் நியாயமான கோப உணர்ச்சியைக் கொண்டிருந்தான். பாருங்கள்? அவனுக்குள் முழுவதும் கோபத்தைக் கிளறி விடுகிற ஏதோவொன்றை அவன் கொண்டிருந்தான். அவன், 'ஏன்... ஏன்... நான்- நான் இந்த நீதிமானாகிய யோசபாத்துக்கு மரியாதைக் கொடுத்திரா விட்டால், உம்மைப் பார்க்கவும் கூட மாட்டேன்' என்றான். 28. நான் இன்று உங்களிடம் கூறுகிறேன், தேவனுக்காக பசியும் தாகமும் உடைய ஒரு கூட்ட ஜனங்களுக்காக அது இல்லாது இருந்தால், தேவன் இன்றிரவே இந்த முழு காரியத்தையும் துடைத்து அகற்றி தூய்மைப்படுத்தி விட்டு மீண்டும் தொடங்குவார் என்று நான் நம்புகிறேன். ஜனங்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவோம். ஆகையால் தான் அவர் - அவருடைய இரக்கமானது சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது, அவர் நீடிய பொறுமை உடையவராய் இருக்கிறார், ஏனெனில் அங்கே சில நீதியான ஜனங்கள் ஜெபித்துக் கொண்டும், முயற்சித்துக் கொண்டும் இருக்கின்றனர். இன்றிரவு நாம் கொண்டிருக்கும் ஒரே நம்பிக்கை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தான் உள்ளது. எதுவுமேயில்லை... நம்முடைய தேசங்கள் மாசுபட்டுள்ளன; நம்முடைய ஜனநாயகங்கள் துண்டுகளாக கிழிக்கப்பட்டும் துண்டு துண்டுக ளாகியும் உள்ளன, இந்த உலகத்தின் இராஜ்யங்கள் துண்டுகளாய் கிழிக்கப் பட்டுள்ளன. ஆனால் சீக்கிரமாய் வருவதாக நாம் விசுவாசிக்கும் ஒரு இராஜ்யம் உண்டு: அது தான் கர்த்தராகிய இயேசு கிறஸ்துவால் உருவாக் கப்பட்ட ஒரு நித்திய இராஜ்யம். உலகத்தின் தேசங்கள் அனைத்திலும் இருந்து இரட்சிக்கப்பட்டவர்கள் அந்த இராஜ்யத்தில் ஜீவிப்பார்கள். அங்கே ஒரே கொடியிருக்கும், ஒரே தேசமாயும் ஒரே ஜனங்களாயும் ஒரே பாஷையைப் பேசுகிறவர்களாயும் இருப்பார்கள்; அது பரலோகப் பாஷை ஆகும். மேலும்... அது தான் அந்நேரத்தின் ஜனங்களாக இருக்கும். 29. இப்பொழுது, எலியாவோ, தீர்க்கதரிசி... எல்லாமாக அவன் இருந்த போது. தீர்க்கதரிசிகள் சில சமயங்களில் கோபப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அல்லது அவன் கடுஞ்சினம் கொண்டான். எனவே அவன் முழுவதும் நகைச்சுவை உணர்வின்றி இருந்தான். அவன்... நகைச்சுவை உணர்வுக்கு அப்பால் இருந்தான் (இது ஒருக்கால் யாரோ ஒருவரை கொஞ்சம் புண்படுத்தி இருக்கலாம், ஆனால் நான் அதை இப்பொழுது பயபக்தியோடு கூறுகிறேன்), கவனியுங்கள், அவன், 'நான் யோசபாத்தைக் கனம் பண்ணியிராவிட்டால், நான் உம்மைப் பார்க்கவுமாட்டேன், ஆனால் இருந்த போதிலும், ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்' என்றான். அது ஏதோவொரு இசை. இப்பொழுது, சில ஜனங்கள் சபையிலுள்ள இசையைக் குறை கூறுகின்றனர். ஆனால் இசையானது தீர்க்கதரிசியின் மீது ஆவியைக் கொண்டு வரும் ஆனால், அது இன்றும் அதே காரியத்தைச் செய்யும். பாருங்கள்? 'ஒரு சுர மண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்' என்றான். அவர்கள் சென்று அந்த சுரமண்டல வாத்தியக்காரனை கொண்டு வந்து, ஏதோவொரு உண்மையான நல்ல கிறிஸ்தவ பாடலை இசைக்கத் தொடங்கினார்கள். தீர்க்கதரிசி அங்கே உட்கார்ந்திருப்பதை நான் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். சுரமண்டல வாத்தியக்காரன் நீண்ட நேரம் இசைத்த பிறகு, தீர்க்கதரிசி தன்னுடைய மோசமான மனநிலையிலிருந்து வெளியே வந்து, தேவனைக் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறான், சற்று கழிந்து, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மீது வந்தார். கர்த்தருடைய ஆவி அவன் மேல் வந்த போது, அவன் தரிசனங்களைக் காணத் துவங்குகிறான். 30. சகோதரனே, இன்று சபையோடு உள்ள காரியமும் அதுவே தான். நாம் தரிசனங்களைக் காணாததன் காரணம் என்னவென்றால், அப்படியே ஒரு சிறிய குறுகலான மனநிலையான எண்ணம் தான், ஏனெனில் நாம் போதுமான அளவு அதிக நேரம் ஜெபிப்பதில்லை அல்லது தேவனுடைய ஆவி நமது மத்தியில் வருவது வரையில் போதுமான அளவு அதிக நேரம் ஏதோவொன்றைச் செய்வதில்லை. போதகர் கூட மேடைக்கு வருவதற்கு முன்பே அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்து பாவிகளும் இரட்சிக்கப்படுவது வரை பழைமை நாகரீகமான பாடல்களை நாம் வழக்கமாக பாடிக் கொண்டு இருந்தோம். ஆனால் இன்றோ, பழைய சம்பிரதாய, பிளவுபட்ட உலர்ந்து போன நிகழ்ச்சியை நாம் கொண்டிருக்கிறோம். நாம் இது, அது மற்றதின் வழியாகப்போக வேண்டியுள்ளது. நாம் தேவனுடைய ஆவியைத் துக்கப் படுத்தி நம்மிடமிருந்து வெளியே விரட்டுகிறோமா என்று பயப்படுகிறேன், நீங்களும் அவ்வாறு எண்ணவில்லையா? நிச்சயமாக... மெதோடிஸ்டுகளின் பழங்கால இரவுகள், அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் அதைக்குறித்து வாசித்துக்கொண்டிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர்கள் முதலாவது இங்கே வந்த போது, ஆஸ்பரியும், ஜான் வெஸ்லியும் மற்றும் அவர்களும் தங்களை பரிசுத்த உருளையர்கள் என்று அழைத்துக் கொண்ட போது. இப்பொழுது, அருமையான இந்தப் பெரிய சபைகளிலுள்ள மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் அதை நம்ப விரும்ப மாட்டார்கள், ஆனால் அவர்கள் அவ்வாறுதான் இருந்தார்கள். அது உண்மை. 31. உங்கள் மேய்ப்பரும் உங்கள் ஸ்தாபனத்தை ஸ்தாபித்தவருமான ஜான் வெஸ்லி-கூட தெய்வீக-சுகமளித்தலில் பெரும் விசுவாசம் கொண்டவர் ஆவார். அவருடைய குதிரை தன் காலை ஒடித்துக் கொண்ட பிற்பாடு, அவர் தமது குதிரையைக்கூட எண்ணெய் பூசி, அதன் மேல் ஏறி, புறப்பட்டுச் சென்றார். அதைத் தான் அவர் செய்தார்; அது அவருடைய சொந்த குறிப்பேட்டில் உள்ளது. என்னிடம் அது உள்ளது. ஆம், ஐயா, அவர் ஒரு ஸ்திரீக்காக ஜெபிக்கும்படி போவதாக இருந்தார், அந்த குதிரையோ விழுந்து, அதனுடைய காலை ஒடித்துக் கொண்டது. அவரால் அக்குதிரையை நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியவில்லை, அந்தக் குதிரையின் கால் உடைக்கப்பட்டு போயிருந்ததை அவர் கண்டு, தம்முடைய சட்டைப் பையிலிருந்து எண்ணெய் கலசத்தை (cruse) எடுத்து, குதிரைக்கு எண்ணெய் பூசி விட்டு, அவருடைய குதிரையின் மேல் துள்ளி ஏறி, அங்கிருந்து புறப்பட்டு சவாரி செய்து சென்று விட்டார். அது உண்மை. இன்றைக்கு மெதோடிஸ்டு சபையில் அதை பிரசங்கம் செய்து பாருங்கள், அவர்கள் உங்களை உங்கள் கதவுக்கு வெளியே துரத்தி விடுவார்கள். ஆனால் நீங்கள் அந்த தவறான காரியத்தைத் தான் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் தடைவேலிகளை நீக்கி விட்டீர்கள், ஆடுகள் வெளியே போய் விட்டன, வெள்ளாடுகளோ உள்ளே வந்து விட்டன. அங்கே தான் உங்கள் சபையானது போய் விட்டிருக்கிறது... மேலும் எல்லாமும்... இன்று சரியாக நாம் அங்கே தான் நின்று கொண்டிருக்கிறோம், அது மிகவும் சரியே... இன்று நமக்குத் தேவை என்னவென்றால் ஒரு புதிய வேத சாஸ்திரம் அல்ல. நமக்கு இன்று என்ன தேவையாயிருக்கிறது என்றால், பரிசுத்த பவுலுடைய பழமை நாகரீகமான ஒரு நல்ல எழுப்புதலும், சபைகள் எல்லாவற்றின் மத்தியிலும் வேதாகம பரிசுத்தாவி திரும்பி வருவதும் தான், அப்போது அது சபைக்கு ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையை திரும்பவும் கொண்டு வரும். அது உண்மை. இன்று சபைக்கு அது தான் அவசியமாயுள்ளது. 32. எலியா, பிறகு என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது... சுர மண்டல வாத்தியக்காரன் இசைக்கத் துவங்கினான், அப்போது ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்தார். பிறகு ஆவி அவன் மேல் வந்த போது... அவன் முழுவதும் உணர்ச்சி வசப்பட்டு கோபம் கொண்டு, இந்த யோராமையும், அங்கே நின்று கொண்டிருந்த இந்த இராஜாக்களில் சிலரையும் கிழித்தெறிந்து விட ஆயத்தமாய், அவர்களோடு கடுமையாகப் பதில் பேசிக் கொண்டிருந்த ஒரு மனிதனாக இருந்தான்; ஆனால் கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் வந்த போது, அவன் தரிசனங்களைக் காணத் துவங்கி, ஏதோவொன்றைக் காணத் துவங்கினான். நீங்கள் இன்றிரவு சபைக்கு வந்து, 'ஓ, நான் எதையும் காணவில்லை, இது வெறுமனே மனோசாஸ்திரத்தைக் கொண்ட ஒரு கூட்டம் பேர் தான்' என்று கூறலாம். காரணம் என்னவென்றால், கர்த்தருடைய ஆவியானவர் உங்கள் மேல் வர நீங்கள் அனுமதிப்பதில்லை. நீங்கள் கர்த்தருடைய ஆவியை உங்கள் மேல் வர அனுமதியுங்கள், அப்பொழுது நீங்கள் ஏதோவொன்றைக் காண்பீர்கள். அது உண்மை. வழக்கமாக எதைக் காண வேண்டுமென்று நீங்கள் வந்திருக்கிறீர்களோ அதையே பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் குற்றம் கண்டு பிடிக்கும்படி வந்திருந்தால், நீங்கள் குற்றம் கண்டு பிடிப்பதற்காக போதுமானவற்றை பிசாசு உங்களுக்குக் காண்பிப்பான். நீங்கள் கர்த்தரைக் காண்பதற்காக வாருங்கள், அப்போது நீங்கள் அதைக் காணும்படியாக தேவன் பார்த்துக் கொள்வார். வழக்கமாக நீங்கள் எதைக் காண வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ அதையே பெற்றுக் கொள்கிறீர்கள். அது உண்மை. எனவே கர்த்தருடைய ஆவியானவர் உங்கள் மேல் வந்து, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அடையாளங்களையும் அற்புதங்களையும் உங்களுக்கு காண்பிக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்றால், நீங்கள் அதைக் காண்பீர்கள், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். 33. மேலும் எலியா, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் வந்த போது, அவன் ஒரு தரிசனம் கண்டான். அவன், 'இப்பொழுது, தரிசனம் வருகிற போது, அந்நேரத்தில் தான் இராஜாக்களுக்கு இரட்சிப்பு வருகிறது, அந்நேரத்தில் தான் பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசியிடம் பேசியிருந்தார்' என்றான். அவன், 'இப்பொழுது, இதோ புறப்பட்டுச் செல்லுங்கள்... நீங்கள் எந்தக் காற்றையும் கேட்கப் போவதில்லை, எந்த மழையையும் காணப் போவதில்லை; ஆனால் நீங்கள் நிறைய வாய்க்கால்களை வெட்ட நான் விரும்புகிறேன். காலையில் ஏறக்குறைய பலிசெலுத்தப்படும் நேரத்தில், அவைகள் எல்லாம் தண்ணீரால் நிரப்பப்படும். நிறைய வாய்க்கால்களை வெட்டுங்கள்' என்றான். இப்பொழுது, அவர்கள் அனுப்பினார்கள் -- திரும்பிச் சென்று ஒவ்வொரு மனிதனையும் அழைத்து வந்து... அவன் ஒரு மண்வாரியை (shovel) எடுத்துக் கொண்டு, வெளியே அந்தச் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் தண்ணீருக்காக வாய்க்கால்களை வெட்டத் தொடங்குவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நீங்கள் எந்தக் காற்றடிக்கும் சத்தத்தையும் கேட்கப் போவதில்லை. நீங்கள் எந்த மழையும் பொழிவதைக் காணப் போவது இல்லை, ஆயினும் அங்கே தண்ணீர் இருக்கப் போகிறது. இப்பொழுது, இந்தச் சுட்டெரிக்கும் மணல் நிறைந்த பாலைவனத்தில் வெள்ளம் எப்படி இருக்கப்போகிறது? ஆகஸ்டு மாதத்தின் நடுவில் மொஜாவெ பாலைவனத் தின் (Mojave Desert) மையப்பகுதிக்குச் சென்று, அங்கே எந்த மழையின் சத்தமும் இருக்கப் போவதில்லை என்றும், எந்தக் காற்றடிக்கும் சத்தமும் அங்கே இருக்கப் போவதில்லை என்றும், ஆயினும் அந்த நீண்ட பள்ளம் முழுவதும் தண்ணீரால் நிரப்பப்படப் போகிறது என்றும் இருக்கும் போது, ஒரு நீண்ட பள்ளத்தைத் தோண்டுவதை உங்களால் எவ்வாறு கற்பனை செய்து பார்க்க முடியும்? ஏன்? தேவன் அவ்வண்ணமாக கூறினார். அது தான் சரியான காரணம் ஆகும். அவர் தமது பார்வையில் மாம்ச சிந்தையை முட்டாளாக்கி விட்டு, அதை சம்பவிக்கப் பண்ணுகிறார், ஒன்றுமில்லாத காரியங்கள் மாம்ச சிந்தைக்கு மிகவும் உண்மையாக இருப்பதாகத் தோன்றுகிறது. மாம்ச சிந்தைக்கு மூடத்தனமாகத் தோன்றுகிற காரியங்களை அவர் எடுத்துக் கொண்டு, அதை உண்மையாக்குகிறார். 'இப்பொழுது சரியாக வெளியே அந்தப் பாலைவனத்தின் மையத்தில் வாய்க்கால்களை வெட்டத் தொடங்குங்கள்.' 34. நல்லது, ஒவ்வொருவனும் தன்னுடைய வாய்க்காலை வெட்டினான். நல்லது, இப்பொழுது அம்மனிதன் தனக்கும், தன்னுடைய கால்நடை-களுக்கும், தன்னுடைய குதிரைகளுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவையோ, அதைப் பொறுத்து அவன் வெட்டின வாய்க்கால் அவ்வளவு தோண்டி னார்கள்- அவ்வளவு பெரிதாக இருந்தது, ஏனென்றால் அந்த வாய்க்கால் ஆனது முழுவதுமாக நிரப்பப்படப் போகிறது. அவன் தோண்டத் துவங்குவதை நான் காண்பதாக என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றிரவும் நாம் செய்து கொண்டிருக்க வேண்டியது அதுதான், ஏதோவொரு தோண்டிக் கொண்டிருத்தல், இந்நாட்களில் ஒன்றில் பழைமை நாகரீகமான ஒரு ஊற்றப்படுதலுக்கு ஆயத்தமாகுதல். அந்த மனிதன் தோண்டுவதை என்னால் காண முடிகிறது. நீங்கள் அறிந்து கொள்ளும் முதலாவது காரியம் என்னவென்றால், அவன் ஒரு சில மண்-வாரிகள் முழுவதுமாக நிறைத்து (மண்ணை - தமிழாக்கியோன்.) வெளியே எறிந்தான். அப்போது ஒரு உலோகத்தின் மேல் படும் போது ஏற்படும் டிங் டிங் என்ற பழைய பெரும் சத்தம் (clinker) கேட்கிறது. அது என்ன? அவன் அதை வெளியே இழுக்கிறான், அது ஏதோ ஒரு வகையான ஏதோவொரு பழைய பெரிய தகரத் தட்டு (tin pan). அங்கே கீழே அதைப் பார்க்கிறான். இதோ அது இருந்தது. சபை அங்கத்தினர்களில் ஒருவர், 'ஜான், இப்பொழுது, இதோ பார், நீ வியாதியாயிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நீ அங்கே போவாயானால், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன' என்று கூறுகிறான். (தோண்டிக் கொண்டிருக்கும்) குழிக்குள் அந்தப் பழைய தகரத் தட்டு கிடக்கும்படி நீங்கள் செய்யுமட்டும், உங்களால் ஒரு போதும் தண்ணீரால் நிரப்ப முடியாது. அந்தக் காரியத்தை வெளியே எறிந்து விடுங்கள், எனவே அது- அப்போது தான் தண்ணீர் அதன் இடத்தை எடுத்துக் கொள்ளும். தண்ணீர் ஜீவனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 35. நீங்கள் அங்கே கீழே தோண்டுகிறீர்கள், இதோ யாரோ ஒருவர் வந்து, 'இப்பொழுது, கவனமாயிருங்கள். அது மனதிலுள்ளதைப் படிக்கும் கலை ஆகும் (mental telepathy). அனேகர் அதைப் போன்ற அப்படிப்பட்ட காரியத்தின் மேல் நம்பிக்கை வைத்து தனது ஜீவனை இழந்து போனது எனக்குத் தெரியும்' என்று கூறுகிறான். அப்படியே அந்தக் காரியத்தை தோண்டி வெளியே எறியுங்கள். எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறீர்களோ, அவ்வளவு அதிக தண்ணீரை நீங்கள் கொண்டிருப்பீர்கள். இன்றிரவு நமக்கு என்னத் தேவையென்றால், பிசாசு உங்களைச் சுற்றிலும் எறிகிற எல்லா சிறிய பழமையான அச்சுறுத்தல்களையும் காரியங்களையும் விட்டு விடுவிக்கும் ஒரு நல்ல பழைமை நாகரீகமான விடுவித்தலாகும். இரு கரங்களையும் மேலே விரித்து, 'தேவனே, பலத்த காற்று அடிக்கிற முழக்கத்தை அனுப்பும். உமது ஜீவத்தண்ணீரால் என் ஆத்துமாவை முழுவதுமாக நிரப்பும்' என்று கூறுங்கள். ஏனெனில் தீர்க்கதரிசி இந்த ஒரு காரியத்தை அறிந்திருந்தான், ஒரு சமயம் இஸ்ரவேலர் அங்கே வெளியே அந்த வனாந்திரத்தைக் கடந்து சென்ற போது, அங்கே அனேக வருடங்களுக்கு முன்பல்ல... அந்தக் கன்மலை ஆனது இன்னும் அங்கே வெளியே அந்த வனாந்தரத்திலேயே இருந்தது, அந்தத் தண்ணீரை உண்டாக்கக்கூடிய அந்தக் கன்மலை. வனாந்தரத்தில் இருந்த அதே கன்மலையானது பசியாயும் வறண்டு போனதுமான ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் ஜீவத் தண்ணீரைக் கொண்டு வரும்படிக்கு பரிசுத்தாவியின் ரூபத்தில் இன்றிரவு சரியாக இங்கே உள்ளது. பாவ வியாதியோ, அல்லது புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கும் நிலையோ, நீங்கள் என்னவாயிருந்தாலும், உங்களுக்காக ஜீவத் தண்ணீரை உண்டாக்க தேவன் இங்கே இருக்கிறார். அது ஏற்கனவே அடிக்கப்பட்டு உள்ளது. அது ஓடிக் கொண்டிருக்கிறது. உங்கள் வாய்க்கால்களை வெட்டுங்கள். எல்லா அவிசுவாசத்தையும் வெளியே எறியுங்கள், வேதாகமம், 'விருப்பமுள்ளவன் எவனோ, அவன் வந்து ஜீவத்தண்ணீரை இலவசமாக பானம் பண்ணக்கடவன்' என்று கூறுகிறது. அவன் மெதோடிஸ்டாக இருந்தாலும், பாப்டிஸ்டாக இருந்தாலும், கத்தோலிக்கனாக இருந்தாலும், பிரஸ்பிடேரியனாக இருந்தாலும், பெந்தேகோஸ்தேயினனாக இருந்தாலும், அவன் யாராக இருந்தாலும், தேவனுடைய ஆவியை இலவசமாக பானம் பண்ணக் கடவன். ஆமென். 36. பிறகு நான் கவனிக்கிறேன், அடுத்த நாள் காலையில், மோவாபியர்கள் பார்த்த போது, எல்லா வாய்க்கால்களும் தண்ணீரால் நிரம்பி இருந்தன, சூரியன் (உதித்து) மேலே வந்த போது, அதன் மேல் பட்டு பிரதிபலித்து... அதை உண்டாக்கினது. இஸ்ரவேலர்களுக்கோ அது குடிப்பதற்கான தண்ணீராக இருந்தது, அவர்கள் ஒரு அற்புதமான நேரத்தைக் கொண்து இருந்தனர், ஆனால் அங்கிருந்த அவர்களுக்கோ (மோவாபியர்களுக்கோ) அது இரத்தமாக இருந்தது. எனவே அவர்கள், 'நாம் அங்கே போகலாம்' என்றனர். அங்கே பதுங்கியிருந்து தாக்குதல் (ambush) நடந்தது, அவர்கள் மோவாபியர்களை முற்றிலுமாக மதில்களை நோக்கி விரட்டியடித்து விட்டு, அவர்களுடைய பட்டணங்களை இடித்துப் போட்டனர். மற்றொரு காரியம் என்னவென்றால், ஒவ்வொருவனும் ஒரு கல்லை தன்னுடைய கையில் கொண்டு சென்று, அவர்கள் (மோவாபியர்கள்) கொண்டிருந்த ஒவ்வொரு கிணற்றையும் மூடி விட்டனர். இப்பொழுது, இன்றிரவு செய்யும்படியாக நமக்கு என்ன தேவை என்றால், ஏறக்குறைய நம்மை எழுப்புவதற்குப் போதுமான அளவு ஆவியைப் பெறுவதற்கும், தேவனை நம்பி, நாம் போதுமான அளவு தண்ணீரைப் பெறுவது மட்டுமாக போதுமான வாய்க்கால்களை வெட்டுவதற்கும், ஒரு நல்ல பழைமை நாகரீகமான சாட்சியின் கல்லை எடுத்து வந்து, 'அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன' என்று கூறிக் கொண்டிருக்கும் இங்கே சுற்றிலுமிருக்கிற இந்தப் பழைய சம்பிரதாயமான கிணறுகளில் சிலவற்றை தூர்த்துப் போடுதலாகும். போய், களிகூர்ந்து கொண்டு, தேவனை ஸ்தோத்தரியுங்கள். நமக்கு இன்றிரவுக்கான தேவை அதுதான். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? 37. என்னுடைய நேரம் கடந்து சென்று விட்டது. ஓ, என்னே, நான் மீண்டும் சிகாகோவுக்கு வரும் போது, இன்னும் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கர்த்தரை நேசிக்கிறேன், அவருடைய நன்மைகளையும் அவருடைய வல்லமையையும் நினைத்துப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இங்கே இருக்கும் இச்சிறு சகோ.எக்பர்க் அவர்கள் அதை சற்று முன்பு பிரசங்கம் பண்ணுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அல்லது அவர் அதைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். இன்னும் சரியாகச் சொன்னால், அவர் பாடிக் கொண்டிருந்தார். 'வழியருகே உட்கார்ந்து ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான், அப்போது இயேசு வந்தார். வெறிபிடித்தவன் கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான், அப்போது இயேசு வந்தார்.' சில வருடங்களுக்கு முன்பு, இங்கே ஆர்கன்ஸôஸில் (நடந்த சம்பவத்தை) அது எனக்கு நினைவுபடுத்துகிறது. நான் ஆர்கன்ஸ்ஸிலுள்ள லிட்டில் ராக்கில் ஒரு கூட்டத்தில் இருந்தேன். அங்கே ஒரு- அந்த ஆடிட்டோரி-யத்தில் இதைப் போன்ற ஏதோவொரு ஒழுங்கில் நாங்கள் இருந்தோம். அங்கே அதற்கு அடியில் கீழ் அறை ஒன்று இருந்தது. ஆர்கன்ஸ்ஸிலுள்ள லிட்டில் ராக்கை சேர்ந்த திரு. எ.ஏ.பிரௌன் அவர்கள், அங்கேயிருந்த அப்போஸ்தல சபையினுடைய ஒரு மேய்ப்பராக இருந்தார் (நீங்கள் இந்த சாட்சிக்காக அவருக்கு எழுத விரும்பினால், 505, விக்டர் தெருவுக்கு (எழுதுங்கள்)), அவர் என்னிடம் கூறினார்; அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் அநேக காட்சிகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் கீழ் அறையில் இருக்கும் அதைப் போன்ற எதையும் நீர் ஒருபோதும் கண்டு இருக்கவே மாட்டீர்' என்றார். நான், 'என்ன அது?' என்றேன். அவர், 'அது பைத்தியம் பிடித்த ஒரு பெண்மணி, நீர் அவளைப் பார்த்தாக வேண்டும்' என்றார். 38. எனவே பிரசங்க நேரத்திற்கும் வியாதியஸ்தர்களுக்காக, வியாதியஸ் தர்களுக்காக ஜெபிக்கும் நேரத்திற்கும் இடையில் எனக்குக் கொஞ்ச நேர இடைவெளி கிடைத்த போது, அந்தப் பெண்மணியைக் காணும்படியாக கீழ் அறைக்கு இறங்கிச் சென்றேன். அவர்கள் அவளை அங்கே வைத்து இருந்தனர். அவர்கள் அவளை உள்ளே அல்லது அவர்கள் இருந்த கட்டிடத்தில் கொண்டு வந்திருந்த போது, அவள் ஏறக்குறைய அந்த சபையையே சின்னாபின்னமாக்கியிருந்தாள். அவர்கள் அவளை அங்கே கீழே வைத்திருந்தனர் மேலும் சில... நீங்கள் கீழே போகையில், அவளுடைய கணவன் படிகளில் நின்று கொண்டிருந்தார், அவர் மிகவும் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள ஆர்கன்சாஸ் சகோதரன் ஆவார்: அவருடைய சட்டை ஒட்டுத் தையலிடப்பட்டிருந்தது, மேலும் ஒவ்வொரு காரியமும், அவர்கள்... படிகளில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தனர்... நான், 'வணக்கம், ஐயா' என்றேன். அவர், 'நீர் தான் சகோதரன் பிரன்ஹாமா?' என்று கேட்டார். 'நான் தான்' என்றேன் நான். அவர், 'நான் இப்பொழுது தான் உம்முடைய பிரசங்கத்தை P. A. சிஸ்டம் (P. A. system) வழியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்' என்றார். நான், 'வியாதிப்பட்டிருப்பது உமது மனைவியா?' என்று கேட்டேன். அவர், 'ஆம், ஐயா. அவள் இப்பொழுது 2-வருடங்களாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து வருகிறாள்' என்றார். நான், 'ஏன், அது மிகவும் மோசம் தான்' என்றேன். 'சகோதரன் பிரன்ஹாமே, அவள் ஒரு நல்ல பெண் தான்' என்றார். 'எங்களுக்கு ஐந்து சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள், இங்கேயிருக்கிற ஒரு பிள்ளைக்கு ஏறக்குறைய 3-வயது ஆகிறது. மருத்துவர் அவளுக்கு ஒரு ஊசி போட்டார், அது தான் அவளை பயித்தியம் பிடித்து ஓடச் செய்தது. ஏதோவொன்று தவறாயிருந்திருக்கிறது' என்றார். அது மருத்துவரின் தவறு தான். அதைக் குறித்து எதுவும் சொல்லவில்லை, ஆனால் - ஆனால் எப்படியும்... நான் அந்த மருத்துவரை குறை கூறவில்லை, ஆனால் மருந்தானது உதவி செய்கிறது போலவே, சில சமயங்களில் அது கொல்லவும்கூடச் செய்கிறது, நீங்கள் பாருங்கள் ஆனால் அவ்வளவு தான்... 39. கொஞ்ச காலத்திற்கு முன்பு, அங்கே ஏதோவொரு பெண்மணி இருந்தாள், அவள் கிறிஸ்தவ விஞ்ஞானத்தைச் சேர்ந்த பெண்மணி, அவள் தன்னுடைய குழந்தைக்காக கர்த்தரை நம்பியிருந்தாள், (ஆனால்) அது கலிபோர்னியாவில் மரித்துப் போய் விட்டது. தேசம் முழுவதும், இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், ஒவ்வொரு செய்தித்தாளும், பத்திரிகைகளும்: 'ஓ, நீங்கள் அதைக் கண்டீர்களா? நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? நான் என்ன கூற விரும்புகிறேன் என்று பாருங்கள்? அங்கே தான் அது இருக்கிறது. அது -அது- - தெய்வீக சுகமளித்தல், உங்களால் அதை நம்பவே முடியாது. அங்கே பாருங்கள், அது என்ன? அதைத்தான் அது செய்கிறது. அந்தக் குழந்தையானது மரித்துப் போய் விட்டதே' என்று கூறின. நல்லது, அவர்கள் எப்போதுமே கொஞ்சம் அதிக தூரம் கடந்து சென்ற யாரையோ நோக்கி, யாரோ ஒருவரை நோக்கி சுட்டிக் காட்டவே முயற்சிக்கிறார்கள், (ஆனால்) போதுமான அளவு தூரம் கடந்து போகாத ஒருவரைக் குறித்து அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதே கிடையாது. கவனியுங்கள்- அங்கே ஒரு பழமொழி உண்டே, அது... நான் இதைக் குறித்துக் கூற விரும்பவில்லை, ஆனால் பெண் வாத்தில் கிடைக்கும் சமையற்குழம்பு தான் ஆண் வாத்திலும் கிடைக்கும் (sauce for the goose, is for the gander). அதே நேரத்தில் அந்தப்பெண்- அனுப்பினார்கள்- அந்தச் செய்தித் தாள் இந்த தேசம் முழுவதும் போய்க் கொண்டேயிருந்தது, மருத்துவ சிகிச்சையால் அங்கே 10,000 ஜனங்கள் மரித்துப் போயினர். எனவே நீங்கள் ஒன்றை நம்ப வேண்டாம் என்று குற்றஞ்சாட்ட வேண்டுமானால், நாம் மற்ற ஒன்றையும் நம்ப வேண்டாம் என்று கண்டனம் செய்வோம். அது உண்மை. எனவே நான் இரண்டையுமே செய்து விட்டு, 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே நம்புங்கள்' என்று கூறுகிறேன். அது உண்மை... ஆனால் காரியங்கள் அந்தவிதமாகத்தான் உள்ளன. 40. எனவே - இந்நேரத்தில் மருத்துவர் காலத்திற்கு முன்பே நிகழ்கிற மாதவிடாய்க்காக அவளுக்கு ஒரு ஊசி போட்டிருக்கிறார், அது அவளுடைய தலைக்குப்போய் விட்டிருந்தது, அவள் ஒரு மனநோய் மருத்துவமனையில் 10-வருடங்களாக இருந்திருக்கிறாள். எனவே அவர்கள்... அவள் ஒரு பயங்கரமான தோற்றத்தில் இருந்தாள். நான் தரையில் நோக்கிப் பார்த்தேன், அவள் அங்கே கிடந்தாள். அவர்கள் அவளை அந்தவிதமாக உடுத்தியிருந்தனர்... அவள் இரண்டு வருடங்களாக அவளுடைய முதுகிற்கு அப்பால் இருந்ததில்லை. அவளுடைய அவளுடைய கைகால்கள் இவ்வித மாக மேலே நீட்டிக் கொண்டிருந்தன, கைகளும் கால்களும் அவ்விதம் இருந்தன. அவளுடைய கைகால்கள் எல்லாம் இரத்தம் வடிந்து கொண்டு இருந்தன. நான், 'ஏன் அவளுக்கு இரத்தம் வடிகிறது?' என்று கேட்டேன். 'சகோ.பிரன்ஹாமே, நான்--நான் இன்றிரவு அவளை இங்கே ஒரு காரில் வைத்துக் கொண்டு வர வேண்டியதாய் இருந்தது. அவளைக் கொண்டு வர ஆம்புலன்சுக்கு தைரியம் இல்லை. எனக்கு ஒரு சகோதரன் இருந்தார்... அங்கே எங்களில் நான்கு பேர் வந்து, (அவளைக்) காரில் வைத்து, ஒருவர் காரை ஓட்டினார். அவள் அவருடைய கார் கண்ணாடிகள் எல்லாவற் றையும் காலால் உதைத்துக் கொண்டிருந்தாள்' என்றார். எனவே அது... நான், 'என்னே...' என்றேன். 41. 'சகோ.பிரன்ஹாமே, எங்களுக்கு ஒரு சிறு குழந்தை வீட்டில் இருக்கிறது. நான்- நான்... நான் என்னுடைய கோவேறு கழுதைகளை விற்று விட்டேன். நான் எல்லாவற்றையுமே விற்று விட்டேன். அவர்களால் கூடுமான எல்லா சிகிச்சைகளையுமே நான் அவளுக்கு செய்து விட்டேன், அதிர்ச்சி சிகிச்சைகளும் செய்து விட்டேன். அவளோ அந்த நிலையிலேயே அங்கே படுத்திருக்கிறாள். எனக்கு-எனக்குத் தெரியவில்லை. ஒரு ஸ்திரீ சுகமடைந்ததைக் குறித்து நான் கேள்விப்பட்டேன் (சகோதரன் - சகோதரன் ஜாக் அவர்களே, அவள், மெரிடியனிலிருந்து வந்திருந்த அந்தப் பெண்மணி தான், அவள் மனநல மருத்துமனையிலிருந்து சுகமாக்கப்பட்டாள், அவள் 10 வருடங்களாக அந்த மனநல மருத்துவமனையிலே இருந்தாள்.)' என்றார். எனவே அவர், 'நல்லது, நான் அவளை அங்கு கொண்டு செல்வேன்' என்றார். நான், 'நல்லது, சகோதரனே, நான் அவளுக்காக ஜெபிப்பேன்' என்றேன். நான் இவ்விதமாக படிகளை விட்டு அப்பால் போகத் துவங்கினேன். அவர், 'ஓ, சகோ.பிரன்ஹாமே, அங்கே போகாதீர்கள். அவள் உங்களைக் கொன்று விடுவாள்' என்றார். நான், 'ஓ, நான் அப்படி நினைக்கவில்லை' என்றேன். நான் அப்போது வெறுமனே ஒரு வாலிபனாக இருந்தேன். எனவே நான் அங்கே நடந்து சென்றேன், அவள் இவ்விதமாக என்னை நோக்கி அவளுடைய கையை நீட்டிக் கொண்டிருந்தது போன்று நடந்து கொண்டாள். நான், 'வணக்கம்' என்றேன். அவள் ஒருபோதும்... அவள் அப்படியே தன்னுடைய கண்களை சிமிட்டிக் கொண்டு (அவள் அங்கே படுத்திருந்தாள்), மிகவும் உணர்வற்ற விதமாக பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய கரத்தைக் குலுக்குவதற்காக அவளுடைய கையைப் பிடித்தேன். தேவன் என்னோடு இருந்திராவிட்டால், அந்த மனிதர் சரியாக இருந்தார். அப்போது அவள் இவ்விதமாக என்னை ஒரு மிகப்பெரிய அளவில் இழுத்தாள், மேலும் என்னுடைய... அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்ட ஜனங்கள் தங்களுடைய பலத்தைப் போல ஏறக்குறைய பத்து மடங்கு பலம் கொண்டவர்களாக இருப்பார்கள். 42. பிசாசு ஒரு மனிதனை முழுவதுமாக பீடிப்பானானால், அது அவர்கள் உடைய உண்மையான பலத்தைக் காட்டிலும் அநேக மடங்கு பலம் உள்ளவர்களாக அவர்களை ஆக்க முடியும், (அப்படியானால்) அவ்விதமாக தேவன் உங்களை முழுவதுமாக ஆட்கொள்ளும் போது, அவர் என்ன செய்வார்? அவரால் என்ன செய்ய முடியும்? அவர் முடமான கைகளை நேராக்குவார். ஒரு போதும் நடக்கவே செய்திராத மனிதனை அவரால் மீண்டுமாக நடக்கச் செய்ய முடியும். அங்கே உள்ள அந்தக் கண்புரையை, உங்களால் மீண்டும் இயல்பாக காணக்கூடிய அளவுக்கு அவர் பார்வையை உட்செலுத்துகிறார் (கொடுக்கிறார்)... ஏன் அவர் வல்லமை உள்ளவர், அற்புதமானவர். வானங்களிலும் பூமியிலும் உள்ள சகல வல்லமைகளும் அவருக்குச் சொந்தமானவையாக உள்ளன. இந்த ஸ்திரீ அந்நிலையில் இருந்தாள், அவள் என்னை பெரும்பலத்தோடு சட்டென இழுத்தாள். இங்கேயுள்ள என்னுடைய காலானது அவளுடைய நெஞ்சில் போய் இடித்தது, அல்லது அவள் அப்படியே என்னை தரையில் தூக்கி எறிந்தாள். நான் சட்டென இழுத்தேன் - என்னுடைய கையை விடுபடும்படி நான் சட்டென இழுத்துக் கொண்டேன், நான்-நான்-நான் பின்னால் ஓடி படியின் மேல் குதித்தேன், இதோ அவளோ என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள், அவள் தன்னுடைய சரீரத்தை இழுத்துக் கொண்டே தரையில் இருக்கும் ஒரு சர்ப்பத்தைப் போல என்னைத் துரத்திக் கொண்டே நல்ல நேரத்தை செய்து கொண்டிருந்தாள். அப்படியே இவ்விதமாக இழுத்து, இழுத்து கொண்டேயிருந்தாள். அவள் பிடிக்கும்படியாக நெருங்கி வந்து கொண்டே, 'ஷ்ஷ்ஷ்ஷ், ஷ்ஷ்ஷ்ஷ்...' என்று ஒரு பாம்பு ஒலி எழுப்புவதைப் போன்று ஒலியெழுப்பிக் கொண்டு வந்தாள் (சகோ.பிரன்ஹாம் விளக்கிக் காண்பிக்கிறார் - ஆசி.) நல்லது, நான் அவளை நோக்கிப் பார்த்து விட்டு, 'நான் இதைப் போன்ற எதையும் ஒருபோதும் கண்டதேயில்லை' என்று நினைத்தேன். எனவே, அப்போது அவள் சுற்றித் திரும்பி, தன்னுடைய மகத்தான பெரிய பலமான கைகால்களை சுவற்றில் மோதினாள், அவ்விதமாக காலால் உதைத்துக் கொண்டாள், அங்கே ஒரு பெஞ்ச் இருக்கை இருந்தது, அவள் தன்னுடைய தலையை அந்த பெஞ்சில் மோதினாள், அப்போது அதனுடைய ஒரு பாகம் தூர பறந்தது. அவளுடைய தலையிலிருந்து இரத்தம் வந்தது; தலைமுடி அங்கே கீழே விழுந்தது. அவள், 'ஹி-ஹி-ஹி-ஹி, ஹி-ஹி' என்பது போன்று மிகவும் பயங்கரமாக சிரித்துக் கொண்டிருந்தாள். (சகோ.பிரன்ஹாம் விளக்கிக் காண்பிக்கிறார் - ஆசிரியர்.) 43. நான், 'என்னே...' என்றேன். அவள் அந்தத் துண்டுபலகையை தன்னுடைய கையில் எடுத்து அதை அவளுடைய கணவனை நோக்கி எறிந்தாள், அது அப்படியே சுவரில் இருந்த சுண்ணாம்பு பூச்சின் மேல் பட்டது. நான், 'நல்லது, அது பயங்கரமாய் உள்ளதே' என்றேன். நான், 'நல்லது...' என்றேன். அவர், 'சகோ.பிரன்ஹாமே, நான் என்ன கூறுகிறேன் என்பது உமக்குப் புரிகிறதா? ஏதாகிலும் செய்யப்பட முடியுமா?' என்றார். அவர் அழத் துவங்கி, தன்னுடைய தலையை என்னுடைய தோளின் மேல் போட்டுக் கொண்டார். நான், 'ஆம், ஐயா. இயேசு கிறிஸ்துவால் அவளைச் சுகமாக்க முடியும்' என்றேன். அவர், 'ஏன், சகோ.பிரன்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். நான், 'வெறுமனே விசுவாசியுங்கள். நான் -- நான் இங்கே நின்று கொண்டு அவளுக்காக ஜெபிக்க முடியும், நீங்கள்... நான்... நான் உங்களுக்குக் கூறுகிறேன், நான் அங்கு சென்று என்னுடைய கரங்களை மீண்டுமாக அவள் மேல் வைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் விசுவாசிப்பீர்களானால், இயேசு அவளைச் சுகமாக்குவார், நான் இங்கிருந்து ஜெபிப்பேன்' என்றேன். அவர், 'சகோ.பிரன்ஹாமே, நான் விசுவாசிப்பேன்' என்றார். 44. ஏறக்குறைய அந்நேரத்தில், அவள் சுற்றித் திரும்பி, 'வில்லியம் பிரன்ஹாம், எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் அவளை இங்கே கொண்டு வந்தேன்' என்றாள். நல்லது, அவளுடைய கணவன், 'சகோ.பிரன்ஹாமே, அவளுக்கு என்ன நேர்ந்தது? இரண்டு வருடங்களில் இது தான் அவள் பேசின முதலாவது வார்த்தைகள். அவளுக்கு தன்னுடைய சொந்த பெயர் கூடத் தெரியாதே. அவளுக்கு எதுவுமே தெரியாது' என்றார். நான், 'அது அவளல்ல. அது அந்தப் பிசாசு. புரிகிறதா? அவன் தான் பேசிக் கொண்டிருக்கிறான். புரிகிறதா?. பாருங்கள், அந்தவிதமாகத்தான்...' என்றேன். அவர், 'நல்லது, நான் - -நான் எச்சரிக்கை அடைந்து விட்டேன்' என்றார். நான், 'இது எச்சரித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது வெறுமனே விசுவாசியுங்கள். நாம் ஒருவரைச் சூழ ஒருவர் நமது கரங்களைப் போட்டுக் கொள்வோம்' என்றேன். நான் பரலோகத்தை நோக்கி ஏறெடுத்தேன். நான், 'பரலோகப் பிதாவே, நீர் இந்தப் பெண்ணை சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். சாத்தானே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவளை விட்டு விலகு' என்றேன். அவர், 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். நான் பின்னாலிருந்த மேல்மாடிக்கு ஏறிச் சென்றேன். அவர், 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். நான், 'அவளை மறுபடியும் திரும்ப மனநல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள். அவர்கள் அதைக் குறித்து என்ன கூறுகிறார்கள் என்று பாருங்கள். நீர் விசுவாசிக்கிறீரா?' என்றேன். அவர், 'அந்த மற்ற பெண்ணும் சுகத்தைப் பெற்றிருப்பாளானால், என்னுடைய மனைவியும் கூட சுகமடைவாள் என்று நான் விசுவாசிக்கிறேன்' என்றார். நான், 'அதைச் செய்ய வேண்டிய வழி அது தான். அது தான் அது' என்றேன். 45. அதன் பிறகு ஏறக்குறைய மூன்று - நான்கு வாரங்கள் கழித்து... நான் ஆர்கன்ஸ்ஸிலுள்ள ஜோன்ஸ்போரோவில் இருந்தேன், நான் ஒரு... ஒரு கூடாரத்தில் இருந்தேன், எனக்கு அங்கே ஒன்று அல்லது இரண்டு இரவுகளுக்கு ஆராதனைகள் இருந்தது. அப்போது யாரோ ஒருவர் அவ்விதமாக அமர்ந்து கொண்டு, என்னைப் பார்த்து தொடர்ந்து கையை அசைத்துக் காட்டிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். நான் அவர்களைக் கவனிக்கவேயில்லை. அங்கே அதிக அளவு சிறு பிள்ளைகள் தொடர்ந்து கைகளை அசைத்துக் காட்டிக் கொண்டிருந்தனர். சிறிது கழிந்து, அதற்கு மேலும் அந்த பெண்மணியினால் நின்று கொண்டிருக்க முடியவில்லை. அவள், 'சகோ.பிரன்ஹாமே, என்னை உமக்குத் தெரிகிறதா?' என்று கேட்டாள். நான், 'இல்லை, பெருமாட்டியே' என்றேன். அவள், 'கடந்த... முதல் தடவையாக உங்களைப் பார்த்ததாக எனக்கு நினைவுள்ளது இது தான். நான் இங்கே லிட்டில் ராக்கில் என்னுடைய முதுகில் இருந்தேனே' என்றாள். நான், 'நீ அந்தப் பெண்மணியாக இருக்காது' என்றேன். அவளுடைய புருஷன், 'தேனே, நான் அதைக் கூறட்டும்' என்றார். எனவே அவர் எழுந்தார், அந்தச் சிறு பிள்ளைகள் தங்கள் தாயைச் சுற்றிலும் தங்களுடைய கரங்களைப் போட்டுக் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் எல்லாரும்... அவளை மறுபடியும் மனநல மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் சென்றதாக அவர்கள் கூறினார்கள். அவளுக்கு ஒரு சிறு கோளாறும் இல்லவே இல்லாதிருந்தது. அடுத்த நாள் காலையில் அவர்கள் சென்று அவளைப் பார்த்த போது, அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். மூன்று நாட்கள் கழித்து, அவள் சுகமானவளாக, அவளுடைய சரியான மனநிலையில், (மருத்துவமனையிலிருந்து) திரும்பினாள். 46. சமீபத்தில், சகோதரன் மூர் அவர்களும் நானும் கலிபோர்னியாவிலுள்ள சான்-பெர்னார்டினோவில் இருந்தோம், நான் அநேக ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன்பாக அதை விவரித்துக் கூறிக் கொண்டிருந்தேன், அந்தப் பெண்மணி எழுந்து நின்று, 'சகோ.பிரன்ஹாமே, என்னை உங்களுக்கு இன்னும் நினைவில்லையா?' என்று கேட்டாள், அவளும் அவளுடைய கணவனும்... அவர்கள் தங்கள் பண்ணைகளை விற்று விட்டு, அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இயேசு வரும் போது, தவறாயிருக்கிற சகல காரியங்களும் நேராகி சரியாக ஆகி விடும். எனவே இன்றிரவு நமது அன்பர் வரும்படியாக நாம் அவரிடம் வேண்டிக் கொள்வோம். அவர் இங்கே பூமியில் இருந்த போது, அவர் செய்த காரியங்கள், ஜனங்களிடம் உள்ள தவறுகள் என்னவென்பதை அவர் அறிந்திருந்தார். அவர், 'பிதா எனக்குக் காண்பிக்கும் வரைக்கும் என்னால் எதுவும் செய்ய முடியாது' என்றார், பரிசுத்த யோவான் 5:19. அந்த எல்லா முடவர்களையும் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பின போது, ஏன் அவரால் அவர்களை சுகமாக்க முடியவில்லை என்றும், அதைப் போன்ற மற்ற காரியங்களைக் குறித்தும்... ஒரு படுக்கையில் (pallet) கிடந்த ஒரு மனிதனை அவர் சுகமாக்கினார். ஏன், அம்மனிதன் எங்கேயிருந்தான் என்று பிதாவானவர் அவருக்குக் காண்பித்தார், என்ன செய்ய வேண்டும் என்றும் பிதாவானவர் அவரிடம் கூறினார். அவர், 'பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார் என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார். அவர்... ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு விட்டு, அந்தக் கூட்டத்திற்குள் ஓடிச் சென்று விட்டாள். வல்லமை, பலம் தம்மை விட்டுப் புறப்பட்டதை இயேசு அறிந்து கொண்டார். அவர் சுற்றும் முற்றும் திரும்பி, அவளைப் பார்த்து, 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்றார். அவர் இன்றிரவும் அதே நேசப்பிதாவாக இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்க வில்லையா? நாம் சற்று நேரம் அவரிடம் ஜெபிப்போமா? 47. இரக்கமுள்ள பிதாவே, இப்பொழுது நாங்கள் எங்கள் தலைகளை வணங்கியிருக்கையில், வேதாகமத்திலுள்ள அந்த மகத்தான பாத்திரங்களுக் காக உமக்கு நன்றி கூறுகிறோம், எவ்வாறு அந்த மனிதர்கள் இறங்கி வந்து, உதவி (செய்யத்) தேவைப்பட்டனர். நீர் ஒருக்காலும் உமக்கு ஒரு சாட்சியும் இல்லாமல் விட்டு விடவில்லை. இன்றிரவும், ஸ்தோத்தரிக்கப் பட்ட பரிசுத்தாவியானவர் எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து-வுக்கு ஒரு சாட்சியாக இங்கே இருக்கிறார். கர்த்தர் தாம் இங்கிருந்து போவதற்கு முன்பாக அவர் எங்களிடம், 'நான் என் பிதாவினிடத்துக்குப் போகிற(படியினால்), நான் செய்கிறகிரியைகளை நீங்களும் செய்வீர்கள்; இன்னும் அதிக... கூட' என்றார். அதே விதமான கிரியைகளை... அவர், 'கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்' என்றார். அவர் எங்களோடு இருப்பார் என்றும், உலகத்தின் முடிவுபரியந்தம் எங்களோடு கூட இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இன்றிரவு நாங்கள் அதை விசுவாசித்து அந்த அடையாளங்களையும் அவர் இங்கே இருக்கிறார் என்பதின் முடிவுகளையும் காண்கிறதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, பிதாவே, இச்சபையும், இங்கே மேடையிலுள்ள உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனுமாகிய, நாங்கள் எங்களைத் தாமே உம்மிடம் சமர்ப்பிக்கையில், பரிசுத்தாவியானவர் வந்து, கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு நபரையும் கட்டுக்குள் எடுத்துக்கொள்வார் என்று நாங்கள் விசுவாசிக்கி றோம். இன்றிரவில் இரட்சிக்கப்படாத எல்லாரையும் நீர் இரட்சித்து உம் உடைய அன்பை மிகவும் அதிகமாக வெளிப்படுத்தியருளும். ஊதாரி போன்று அலைந்து திரிகிறவர்களை பிதாவின் வீட்டிற்கு திருப்பிக் கொண்டு வாரும். இதை அருளும், கர்த்தாவே. இன்றிரவு உம்முடைய பரிதாபமான வியாதிப்பட்டுள்ள தேவையுள்ள பிள்ளைகள் தாமே, அவர்கள் ஒவ்வொருவரும் சுகத்தைப் பெற்றுக் கொள்வார்களாக. தேவனுடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் நான் ஜெபிக்கிறேன்... அவருடைய நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். ஆமென். 48. இப்பொழுது, நாம் ஜெப வரிசையை அழைத்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். இந்நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் தாமே கூட்டத்தை முழுவதுமாக பொறுப்பு எடுத்துக் கொண்டு அதிலிருந்து மகிமையைப் பெற்றுக் கொள்வாராக. இப்பொழுது, ஒவ்வொருவரும் தங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பயபக்தியாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், அப்பொழுது பரிசுத்தாவியானவர் உள்ளேவர அனுமதிப்பீர்கள். சந்தேகப்பட வேண்டாம், அப்படி செய்யாதீர்கள். வேண்டாம்... அது மிக மோசமாக கேடு உண்டாக்குகிறது. நீங்கள் தாமே தேவனுடைய ஒரு தனிப்பட்ட பிரிவினர் என்று உணருகிறீர்களா? உங்களுக்கு அது தெரியுமா? நான்... நான் என்னுடைய தகப்பனாரைப் போன்று காணப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். அவர் ஏறக்குறைய என்னுடைய அளவு உடையவராக இருந்தார், மேலும் --மேலும் ஒரு... ஏன்? அது என்னுடைய அப்பா. நல்லது, நாம் கிறிஸ்தவர்களாக இருப்போமானால், நாம் நம்முடைய பரலோகப் பிதாவின் ஏதோவொரு அடையாளத்தைக் கொண்டிருப்போம், நீங்கள் அவ்வாறு எண்ணவில்லையா? நம்முடைய ஆவியானது அவர் கூட்டத்தில் தம்முடைய- அதில்- கொண்டிருந்து, அவர் மகிமையைக் கொண்டிருந்த அந்த பயபக்தியை ஏற்றுக் கொள்ளும். இன்றிரவு அநேகர் ஒருக்கால் முதல் தடவையாக (வந்திருக்கலாம்)- எங்கள் ஆராதனைகளில் ஒன்றில் முதல் தடவையாக இருக்கலாம், பரிசுத்தாவியானவர் அசைவாடுவதை நீங்கள் காண்கையில், இது ஒருக்கால் நீங்கள் சபையில் கொண்டிருப்பதைக் காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். ஆயினும், நீங்கள் ஒரு--ஒரு குற்றம் கண்டு பிடிப்பவராக இருக்க வேண்டாம் என்றும், நீங்கள் தயவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும் நான்... நான் ஜெபிக்கிறேன். அப்படியே வேத வாக்கியங்களை வாசித்து, சம்பவிக்கிறதாக நீங்கள் காண்கிற காரியங்கள் வேதப்பூர்வமானதா இல்லையா என்று பாருங்கள்; தேவன் இதை வாக்குத் தத்தம் பண்ணியுள்ளரா இல்லையா என்று பாருங்கள். ஒரு காரியம் முதலாவது இங்கிருந்து வெளிவராமல் அதைக்கூற எங்களுக்குத் தைரியம் இல்லை. இது வேதாகமத்திலுள்ள தேவனுடைய திட்டமாக இருக்கிறது. இப்பொழுது, சில சமயங்களில் வேத சாஸ்திரிகள் அதை தவறாக வியாக்கி யானம் செய்ததுண்டு. ஆனால் இப்பொழுது... அவர்கள் குறிப்பிடத்தக்க காரியங்கள் எல்லாவற்றையும் புறக்கணித்து விட முயற்சிக்கிறார்கள், எல்லா காரியங்களும்... இன்றைக்கு மிகத் தாழ்ந்த மதங்களில் ஒன்றாக சுவிசேஷம், கிறிஸ்தவம் இருப்பதற்கு அது தான் காரணம். முகமதியர்கள் பத்து இலட்சம் அளவு அதை மிஞ்சி விட்டார்கள். பாருங்கள்? கிறிஸ்தவமானது தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறது. ஏன்? காரணம் என்னவென்றால், இயேசு நம்மிடம் கூறினவைகளை நாம் செய்யத் தவறி விட்டோம். 'உலகமெங்கும்போய் சகல ஜனங்களுக்கும் பரிசுத்தாவியின் வல்லமையை நிரூபித்துக் காட்டுங்கள். உலகமெங்கும் இருக்கிற அவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்: என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள். அவர்கள் சர்ப்பங்களை எடுத்தாலும், அல்லது சாவுக் கேதுவானவைகளைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களானால், அப்பொழுது அவர்கள் சொஷ்தமாவார்கள்' என்றார். அது தான் மகத்தான கடைசி கட்டளையாக (last commission - கடைசியாக ஒப்படைக்கப்பட்ட பணியாக) இருந்தது, இரட்சகருடைய உதடுகளிலிருந்து வந்த கடைசி வார்த்தைகள் அவைகள் தான். அவருடைய கட்டளை (commission) உண்மையாக உள்ளது என்பது எனக்குத் தெரியும். 49. இப்பொழுது, அவர் செய்தது போன்ற காரியங்களை, நாமும் செய்வோம் என்று அவர் கூறியிருக்கிறார், பரிசுத்த ஆவி என்பது எதற்காக? பரிசுத்த ஆவி என்பது என்ன? அது ஆவி வடிவில் உள்ள இயேசு கிறிஸ்து தான்: 'கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, என்றாலும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் (தனிப்பட்ட பிரதிபெயர்) உங்களோடு, உங்களுக்குள் உலகத்தின் முடிவு பரியந்தம் கூட இருப்பேன்'. அப்படி ஆனால் இன்றிரவும் அவர் அப்போது செய்த அதே காரியங்களைச் செய்கிறவராக, மாறாத இயேசுவாக அவரைக் காண்கிறோம்: அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணி, தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்தி, அவருக்குக் காண்பிக்கப்பட்ட தரிசனங்களின்படி, பிதாவா னவர் என்ன செய்ய வேண்டுமென்று அவரிடம் கூறுகிறாரோ அதையே செய்து கொண்டிருந்தார். 50. இப்பொழுது, நான் ஜெப வரிசையை அழைக்கவில்லை, அப்படித்தானே? சரி. நாம் பார்க்கலாம், உங்களிடம்... அவைகள் என்னவாக உள்ளன. T-கள், இல்லையா, நீங்கள் அதை நேற்று வினியோகித்தீர்களா? T-கள். சரி. நாம் அருகில் கொண்டு வந்திருந்தோம் என்று நம்புகிறேன்... நாம் ஒரே நேரத்தில் ஒரு சிலவற்றை எடுத்துக் கொள்ளலாம். நாம் கடந்த இரவில் அங்கே ஏறக்குறைய 35 அல்லது 50 வரை நீட்டித்து (எடுத்துக் கொண்டோம்) என்று நம்புகிறேன், அது தான் என்று நம்புகிறேன், 35 தொடங்கி 50 முடிய எடுத்துக் கொண்டோம். அப்படியானால் நாம் இன்று இரவில் 85 முதல் 100 வரை எடுத்துக் கொள்வோம். அதுதான் அவைகளில் கடைசி பாகம்: 85 தொடங்கி 100 முடிய. இப்பொழுது, ஜெப அட்டை T-85ஐ வைத்திருப்பது யார், நீங்கள் சற்று உங்கள் கரத்தை உயர்த்தி, 'நான் அதை வைத்திருக்கிறேன்' என்று கூறுங்கள். T-85, அந்த சீமாட்டியிடம் உள்ளது. 86, 87, 88, 89, 90, அதிலிருந்து 100 முடிய. அவர்கள் முதலாவது வந்து, இங்கே வரிசையில் நிற்கட்டும், நாம் அவர்களோடு ஜெபிப்போம். சுற்றிலும் பாருங்கள். உதவிக்காரர்கள்... சகோதரன் மூர் அவர்களே, நீர் கீழே சென்று, இந்த ஜனங்கள்... என்று கண்டு பிடிக்கும்படிக்கு பில்லிக்கும் அந்த உதவிக்காரர்களில் சிலருக்கும் உதவி செய்வீர்களா. அவர்களில் சிலரால் ஒருக்கால் எழுந்து நிற்க இயலாமல் இருக்கலாம். அவர்கள் முடமானவர்களாக இருக்கலாம். அவர்கள் ஒருக்கால் குருடாகவோ அல்லது செவிடாகவோ இருந்து, தங்களுடைய எண் அழைக்கப்பட்டதை கேட்க முடியாமல் இருக்கலாம். இவர்கள்,.. இவர்கள் அவர்களை அழைத்து வர உதவி செய்வார்களானால், நாங்கள் அதற்காக சந்தோஷமடைவோம். 51. இப்பொழுது, இன்றிரவு, எத்தனை பேர் ஜெப அட்டை இல்லாமல் இருந்தும் கர்த்தராகிய இயேசு உங்களைச் சுகப்படுத்த வேண்டுமென்று விரும்பி இக்கட்டிடத்தில் இருக்கிறீர்கள், நாங்கள் உங்கள் கரத்தைக் காணட்டும். நீங்கள் இந்த (ஜெப) வரிசையில் வர எந்த வழியுமே இல்லை, ஆனால் கர்த்தராகிய இயேசு உங்களை சுகப்படுத்த வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? சரி. மேலே பால்கனியில்... என்னே, நான் பெரும்பாலும் ஏதோவொரு இரவில் ஜனங்களுக்காக ஜெபிக்கும்படி அவர்கள் கடந்து போகும் படியான ஒரு-ஒரு (ஜெப) வரிசையைக் கொண்டிருக்கும்படியான எண்ணமுடையவனாக இருக்கிறேன். ஜெபிப்பதற்காக அநேகர் இருக்கிறார்கள். ஒரு இரவில் எத்தனை பேர் அதை விரும்புகிறீர்கள், நாங்கள் உங்கள் கரத்தைப் பார்க்கட்டும்? நான் ஏதோவொரு நாளில் போகப் போகிறேன்... அந்தக் குறிப்பிடத்தக்க காரியத்தின் பேரில், நான் அநேக கூட்டங்களை நடத்தி, ஜனங்களை அப்படியே விசுவாசிக்க விடுகிறேன் என்ற நிச்சயம் உடையவனாயிருக்கிறேன். நான் எதைக் குறித்து பயப்படுகிறேன் என்றால், தேவன் சிட்சைக்காக வைத்திருக்கிற யாரோ ஒருவரை நான் ஏதோவொன்றை விட்டு விலக்கி விடுகிறேன். நான் அதை எடுத்துப் போடுவேன் என்றால், அது... நான் அவரோடு இசைந்து விட்டுக் கொடுத்துப் போகும்படியாகவே தேவன் செய்வார். மோசே-மோசே அங்கே என்ன செய்தான் என்பது ஞாபகம் இருக்கிறதா? அதைச் செய்ய அவனுக்கு வல்லமை இருந்தது, அந்தக் கன்மலையை அடிக்கக் கூடாது என்று தேவன் அவனிடம் கூறின போது, அவன் அதை அடித்தான். ஆனால் தேவனோ அவனை எடுத்துக் கொண்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் அவன் வர அவர் அனுமதிக்கவேயில்லை. நான் அங்கே போக விரும்புகிறேன் என்ற நிச்சயமுடையவனாயிருக்கிறேன், உங்களுக்கு அது இல்லையா? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டிருக்கிற நிச்சயம் உடையவனாக இருக்கவே நான்-நான்-நான் விரும்புகிறேன். அப்படியானால் நான்,.. அவர் என்ன கூறுகிறாரோ,.. அது உண்மை என்று எனக்குத்தெரியும். ஒவ்வொன்றிற்கா-கவும் நான் தேவனையே நம்பியிருக்கிறேன். 52. ஆனால் இங்கே, அமெரிக்காவில் இம்மாதிரியான ஊழியம்... அவர்களுக்கு ஒரு,.. ஒரு ஜெபம் ஏறெடுக்கப்படுகையில்... அவர்கள் எல்லாரும் அங்கே வருவார்களா என்று பார்க்கலாம்... அவர்களிடம் இல்லை என்றால், ஒருக்கால் நமக்கு கொஞ்ச நேரம் மிச்சமிருக்குமானால், நாம் அங்கே வேறொரு இடத்திலிருந்து அழைத்து, இன்னும் கொஞ்சம் ஜனங்களை மேலே கொண்டு வரலாம். எத்தனை பேர் நின்று கொண்டு இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. சில சமயங்களில் நான் மூன்று, அல்லது நான்கு, அல்லது ஐந்து பேரையும் பெற்றுக் கொள்வதில்லை. சில சமயங்களில் ஒரு இரவில் ஐம்பது பேரையும் பெற்றுக் கொள்கிறேன்: அது எவ்வளவு விசுவாசம் இயங்குகிறது என்பதைப் பொறுத்தது. ஆனால் இப்பொழுது, அன்பான கிறிஸ்தவர்களே, பலவீனத்தினிமித்தமாக குற்றம் கண்டு பிடிப்பவர்களிடமிருந்து நான் இன்னும் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். என்னால் அதற்கு உதவி செய்ய முடியாது. நேர்மையாக, என்னால் முடியாது. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்கிற ஏதோவொன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரியுமா, அவர்... கிறிஸ்துவே தேவன். உங்களுக்கு அது தெரியுமா? வார்த்தையாகிய 'கிறிஸ்து' என்றால் என்ன? அதற்கு 'அபிஷேகம் பண்ணப்பட்டவர்' என்பது பொருள். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது, அழிவில்லாத தேவகுமாரனாகிய அவரிடமிருந்து ஒரு,.. ஒரு வல்லமை புறப்பட்டுப் போகுமானால், என்னைப் போன்ற கிருபையால் இரட்சிக்கப்பட்ட பரிதாபமான இழக்கப்பட்ட ஒரு பாவிக்கு அது என்ன செய்யும்? பாருங்கள்? எனவே நான்... ஆனால் அடுத்த தடவை, சிகாகோவுக்கு வரும்போது, அது வித்தியாசமான கூட்டமாக இருக்கும். 53. ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், எங்காவது... ஒரு நபரை மேடைக்கு அழைத்தாலோ, அல்லது பரிசுத்தாவியானவர் அங்கே வெளியே ஏதோ ஓன்றை வெளிப்படுத்த அனுமதித்தாலோ, செய்ய வேண்டுமென்று நீங்கள் அவர்களிடம் கூறுகிற எதையுமே முழு கூட்டத்தினரும் செய்வார்கள். ஆப்பிரிக்காவிலுள்ள டர்பனில், அந்நாளில், சாட்சிகள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பாதிரியாரான நண்பராகிய சகோதரன் ஸ்டாட்ஸ்க்லெவ் இங்கு எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார் (அவர் சற்று நேரத்துக்கு முன்பு மேடையில் என்னோடு இருந்தார்.), அதை அறியும்படியாக அவர் அங்கே இருந்தார், ஒரு நாயைப் போன்று நடந்த ஒரு மனிதன் - ஆன பிறகு. அவன் எழுந்து, கர்த்தர் காண்பித்த ஒரு தரிசனம் மூலம் அவன் சுகமாக்கப்பட்ட போது, அவன் யாரென்றும், அதைக் குறித்த எல்லாமும் அவனிடம் கூறப்பட்டது - அப்போது 25,000 ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள் - ஒரே தடவையில் 30,000 ஜனங்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். Dr. F.F.பாஸ்வர்த், அவர் இப்போது தான் இந்த பிற்பகலில் ஜப்பானுக்கு கடந்து போயிருக்கிறார் (இந்தப் பிற்பகலில் பேசினார்... மிகவும் உண்மையான ஒரு மனிதர்... அது முற்றிலும் சத்தியமாக இல்லை என்றால், எதையும் கூற மாட்டேன் என்பது எனக்குத் தெரியும்.), அவர், 'சகோ.பிரன்ஹாமே, நீங்கள் ஜெபித்த அந்த ஒரு ஜெபத்தில் குறைந்தது 25,000 ஜனங்கள் சுகத்தைப் பெற்றுக் கொண்டார்கள்' என்றார். 54. ஆனால் அமெரிக்காவில், நாம் அதைப் பார்க்கும் போது, நல்லது, 'அது மனோசாஸ்திரம் என்று டாக்டர். ஜோன்ஸ் கூறினார். அது மனதிலுள்ள-வைகளைப் படித்தறிதல் (mental telepathy) என்று வேறு யாரோ கூறினார்கள்' (என்கின்றனர்.) நாம்... நாம் காரணங்களைப் பெற்றுக் கொள்கிறோம். ஏன்? நாம் ஒவ்வொரு உபதேசக் காற்றினாலும் தூக்கி எறியப்படுகிறோம். ஒருவர் இதைக் கூறுகிறார், ஒருவர் அதைக் கூறுகிறார். நண்பர்களே, வேதத்தின் வெளிச்சத்தில் வைத்து அதை ஆராய்ந்துபாருங்கள். வேதாகமம் அவ்வாறு கூறியிருந்தால், அது உண்மையாக உள்ளது. அது அவ்வாறு கூறாவிட்டால், அது உண்மை அல்ல. இப்பொழுது, கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. மேலும் இப்பொழுது, ஜெபம் செய்வதற்காக இங்கே கொஞ்சம் கைக்குட்டைகள் ஆயத்தமாக அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் கைக்குட்டையையோ அல்லது ஏதோ ஓன்றையோ நீங்கள் எந்நேரமாவது தவற விட்டு... ப்பதற்கு வாஞ்சிப்பீர்க(ளானால்). (இந்தப் பொருளை என்னை விட்டு அப்புறப்படுத்து ங்கள்...) (சகோ.பிரன்ஹாம் யாரோ ஒருவரோடு பேசுகிறார்-ஆசிரியர்.) பிறகு, நீங்கள் உங்கள் கைக்குட்டைகளை தவற விட்டு, ஒன்று,.. ஒன்று உங்களுக்குத் தேவைப்படும் போது, இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்-லுக்கு எனக்கு எழுதுங்கள், நான் உங்களுக்கு அதை அனுப்பி வைப்பதற்கு மகிழ்ச்சியடைவேன். 55. இப்பொழுது, இந்த பரிதாபமான, வியாதியோடும் தேவையோடும் இருக்கிற ஜனங்களுக்காக நாம் ஜெபிப்போம். இப்பொழுது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரக்கமானது, அவருடைய செவி... இங்கே அநேகமாக 3000 ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கண்கள் இந்த மேடையை நோக்கி ஒருமுகத்தோடு முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அநேக நாஸ்திகர்களும் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அநேக ஜனங்களுடைய இருதயங்கள் சிலிர்க்கப்பட்டு போயின; அவர்கள் திடமான விசுவாசிகள். சிலர் ஆர்வத்தோடு தேடிக் கொண்டு, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்றும், அவர் இங்கே மாம்சத்தில் இருந்த போது செய்த அதே காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவர் வாக்குத்தத்தம் பண்ணினபடி, அவருடைய சபையாகிய சரீரம் (flesh) வழியாக கிரியை செய்து கொண்டு இருக்கிறார் என்றும் நாங்கள் கூறின பிறகு, என்ன சம்பவிக்குமோ என்று பார்க்கும்படியாக அவர்கள் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன என்றால், தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்காகத்தான். ...அவர் உயிர்த்தெழுந்த பிறகு உடனடியாக, அவர் பவுல் என்ற பெயர் உடைய ஒரு மனிதனுக்குத் தோன்றினார். அவர் ஒரு-ஒரு மகத்தான தேவ மனுஷன் என்று அவர்கள் கண்டனர். அவன் தரிசனங்களைக் கண்டான், தேவன் அவனுடைய ஜெபத்தைக் கனம் பண்ணி, வியாதியஸ்தர்களைச் சுகமாக்கினார். அவனால் அவர்கள் எல்லாரிடமும் போக முடியவில்லை, எனவே அவன் தன்னுடைய சரீரத்திலிருந்து கைக்குட்டைகளையும் மேல் அங்கிகளையும் எடுத்து, அது வியாதியாயும் தேவையோடும் இருப்பவர்-களிடம் போனது. தேவனே, அசுத்த ஆவிகள் ஜனங்களை விட்டு போய், வியாதிகள் சுகமாயின என்று தவறிப் போகாத புனிதமான எழுத்துக்கள் மூலமாக எங்களிடம் கூறப்பட்டுள்ளது. மேலும் கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் பரிசுத்த பவுல் அல்லவென்றும், ஆனால் நாங்கள் - நீர் இன்னும் கர்த்தராகிய இயேசுவாக இருக்கிறீர் என்றும், அவனைப் போலவே பாவிகளாகிய எங்களையும் நீர் இரட்சித்திருக்கிறீர் என்பதையும் உணர்ந்து கொள்கிறோம். இந்தக் கைக்குட்டைகள் (யாரிடம்) போகிறதோ அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே, அவர்களுடைய கடைசி சேருமிடம் வரையில் அவர்களைக் கவனித்துக் கொள்ளும். அவைகள் எங்கே போனாலும், வியாதிப்பட்டிருக்கிற அந்தச் சிறு குழந்தைகளையும், தாய்மார்களையும், தகப்பன்மார்களையும், குமாரத்திகளையும், குமாரர்களையும் சுகமாக்கியருளும். பவுல் அவைகளை தன்னுடைய சரீரத்திலிருந்து எடுத்த போது, அந்நாட்களில் பின்தொடர்ந்தது போன்று, தேவனுடைய ஆசீர்வாதங்கள் தாமே (பின்தொடருவதாக), இன்றிரவு விசுவாசிகளின் இந்த சரீரத்திலிருந்து அவைகள் போகும் போது, அடையாளங்களும் அற்புதங்களும் அதனோடு போவதாக. இயேசு கிறிஸ்துவாகிய அவருடைய குமாரனுடைய நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக...?... 56. இப்பொழுது, கிறிஸ்தவர்களே, நான் எங்கே எந்த நிலைமையில் நின்று கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறது. இங்கே நீங்களாகவே நின்று கொள்ளுங்கள். மேலும் இப்பொழுது, நீங்கள் ஒரு சிறு நாஸ்திகனாக இருப்பீர்களானால், இன்றிரவு தயவுசெய்து மற்ற மண்டலத்திற்குள் சென்று, கொஞ்சம் விசுவாசியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நியாயமானவர்-களாக இருங்கள். அப்படியே, 'வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்' என்று கூறுங்கள். புரிகிறதா? கர்த்தராகிய இயேசு இங்கே பூமியில் இருந்த போது, அந்நாட்களில் அவர் செய்தவைகளைக் கவனித்துப் பாருங்கள். நாம் செய்கிற அதே காரியங்களை அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார் என்பதைப் பாருங்கள். அவர் இப்பொழுது இங்கே நின்று கொண்டிருந்தால் அவர் என்ன செய்திருப்பார் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஜனங்களைச் சுகப்படுத்துகிற அளவிற்கு, அவர், 'நான் கல்வாரியில் மரித்த போதே நான் ஏற்கனவே அதைச் செய்து விட்டேன்' என்பார். நீங்கள், 'நான் ஒரு பாவி; நீர் என்னை இரட்சிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்' என்று கூறலாம். அவர், 'நான் கல்வாரியில் மரித்த போதே அதைச் செய்து விட்டேன். இப்பொழுது, நீ அதை ஏற்றுக் கொள்வாயா? புரிகிறதா? நான் கல்வாரியில் மரித்த போதே நான் உன்னைச் சுகப்படுத்தி விட்டேன். உன்னுடைய மீறுதல்களினிமித்தம் நான் காயப்பட்டேன், என்னுடைய தழும்புகளால் நீ குணமாகி விட்டாய்' என்பார். அவர் அதை இரண்டு முறை செய்ய முடியாது: அவர் அதை ஒரு முறை செய்ய வேண்டும். அது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டது; அது என்றென்றுமாக தீர்க்கப்பட்டு விட்டது. இப்பொழுது, அவரால் - அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், என்னால் இப்பொழுது செய்யக் கூடிய ஒரே காரியம் என்னவென்றால், உங்களை அவரை நோக்கிச் சுட்டிக் காட்டுவது தான். அவ்வளவு தான். அவர் தான் சுகமளிப்பவர். அவர் ஏற்கனவே அதைச் செய்து விட்டார். தேவனுடைய இராஜாதிபத்திய கிருபையை அப்படியே நோக்கிப் பாருங்கள். அவர் ஏற்கனவே எதைச் செய்துள்ளார் என்பதை. 57. இப்பொழுது, அது நானோ அல்லது நீங்களோ இருந்தால், நீங்கள், 'அதற்காக அவர்களால் என்னுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ள முடியாவிட்டால், அவர்கள் தொடர்ந்து போகட்டும்' என்று கூறுவீர்கள். ஆனால் தேவன் அப்படியல்ல. அவர் சபைக்குள் வரங்களை அனுப்புகிறார். அவர்--அவர் விசுவாசிக்கும்படி செய்கிறார். யாரும் கெட்டுப் போவது (அழிந்து போவது) அவருடைய சித்தமல்ல. பாருங்கள்? அப்படியானால் அவர் சுகமளிக்கிற அடையாளங்களையும், அற்புதங்களையும், யாவற்றை யும் ஜனங்கள் மத்தியில் அனுப்பி, அவர்களை விசுவாசிக்கச் செய்ய முயற்சிக்கிறார். இப்பொழுது, நாம் நம்முடைய சபையின் உபதேசத்தை ஒருபுறம் தள்ளி விட்டு, நேராக வேதாகமத்திற்குள் நோக்கிப் பார்த்து, வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம், அதன் பிறகு இயேசு... என்று பார்ப்போம். இங்கேயிருக்கும் எத்தனை பேர் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்று கிறிஸ்தவ விசுவாசிகளாக விசுவாசிக்கிறீர்கள்? நாம் பார்க்கட்டும். உங்களுக்கு நன்றி. அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நான் உங்களிடம் இதைக் கேட்க விரும்புகிறேன்: அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வேத வாக்கியம் கூறுகிறதா? அவர் அதைச் செய்கிறாரா? அவர், 'நான் என் பிதாவினிடத்திற்குப் போகிற(படியினால்), நான் செய்கிற காரியங்களை நீங்களும் செய்வீர்கள்' என்று கூறினாரா? மேலும் என்ன செய்ய வேண்டுமென்று ஒரு தரிசனத்தைப் பிதாவானவர் அவருக்குக் காண்பிக்கும் வரையில் அவரால் எதுவுமே செய்ய முடியாது என்று அவரும் கூட கூறினாரே. அது சரி தானா? இப்பொழுது, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்திருப்பாரென்றால், இன்றிரவும் அவர் அதே காரியத்தைச் செய்வார். இப்பொழுது, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார் என்பதே இன்றிரவு என்னுடைய கருத்தாக உள்ளது. 58. இந்த ஆராதனை முடியும் போது, அநேகமாக நான் பலவீனமாகி விடுவேன், எப்போது அது முடிகிறது என்றும் எனக்குத் தெரியாது, ஆனால் இன்றிரவு நீங்கள் இந்தக் கதவுகளை விட்டு போகையில், அது ஒரு குற்றம் கண்டுபிடிப்பவராக இருக்க வேண்டாம் என்றும், ஆனால் எம்மாவூரிலிருந்து வந்தவர்களைப் போல, 'நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?' என்று கூறிக் கொண்டு போக நான் ஜெபிக்கிறேன். அவர்களுடைய இருதயங்கள் ஏன் கொழுந்து விட்டு எரிந்தது என்று தெரியுமா? அவர்கள் நாள் முழுவதும் இயேசுவோடு நடந்து அங்கே சென்றனர், ஆனால் அவர் விசித்திரமான கனிவான ஏதோ ஓன்றைச் செய்தார், மற்ற மனிதர்கள் அதை அவ்விதமாக செய்யவில்லை, அது அவர் தான் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். அது சரிதானா? இப்பொழுது, நான் ஜெபிக்கிறேன்... கிறிஸ்தவர்களே, இந்தவிதமாக நோக்கிப் பாருங்கள். நீங்கள் சபைக்கு (வந்து) இருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்கள். சிகாகோவைச் சுற்றிலுமுள்ள ஜனங்களாகிய நீங்களும், உங்களுடைய அருமையான சபைகளும் தேவனுடைய ஆசீர்வாதங்களை உங்களோடு வைத்திருக்கிறீர்கள், ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு இன்றிரவு சிறிது வித்தியாசமான ஏதோவொன்றைச் செய்து, எம்மாவூரிருந்து வந்தவர்களைப் போல, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த் தெழுந்து விட்டார் என்று உங்களை அறியச் செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நீங்கள் தாமே, 'நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன' என்று கூறிக் கொண்டே உங்கள் வீட்டிற்குத்திரும்பிப் போவீர்களாக. அதுவே என்னுடைய ஜெபமாய் உள்ளது. 59. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவரே, கர்த்தாவே, இதோ உம்முடைய ஊழியக்காரன் இருக்கிறேன். நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர் என்றும், உம்முடைய மனதுருக்கமும் (compassion) இரக்கமும் அப்போது இருந்ததைப் போன்றே இன்றும் இவர்களுக்காக பெரிதானதாக இருக்கிறதென்றும் ஜனங்களிடம் எவ்வாறு கூற வேண்டும் என்று எனக்குத் தெரிந்த மட்டும் சிறந்த முறையில் பிரசங்கம் பண்ணியிருக்கிறேன். இன்றிரவு உமது கரங்கள் எங்களுடைய கரங்களாக உள்ளன என்றும், நாங்கள் கொண்டிருப்பது போன்ற கரங்களை மாத்திரமே நீரும் கொண்டு இருக்கிறீர் என்றும் உணருகிறோம். நாங்கள் எங்களையே உமக்கு சமர்ப்பித்து, எங்கள் சுயத்தை காட்சியை விட்டு அகற்றி விட்டு, நீர் மாத்திரம் கொண்டிருப்பீரென்றால், உம்மால் எங்களோடு கிரியை செய்ய முடியும். கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலின் மகிமைக்காகவும், இந்தத் தலைமுறையில் அவருடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்-காகவும், நீர் அதை உம்முடைய தாழ்மையான ஊழியக்காரனோடு செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது, கர்த்தராகிய இயேசு தாமே... பில்லி பால், அவர்கள் எல்லாரையும் மேலே வரிசையில் கொண்டு வந்து விட்டாயா? எல்லாரையும் - சரி. 60. சீமாட்டியே, நீ வருவாயா? இப்பொழுது, வரிசையில் வந்து கொண்டிருக்கிற ஜனங்களாகிய உங்களிடம் தான், இதை ஞாபகம் கொள்ளுங்கள், மற்றும் வெளியே கூட்டத்தினரிடமும் தான், அவர் என்ன கூறினாலும் அதைச் செய்யுங்கள். மேலும் இப்பொழுது, இந்நேரத்தில், அவர்கள்... உங்கள் அநேகரிடம் அந்தப் படம் இருக்கிறது. அந்தப் படத்தை விற்க வேண்டுமானால் - அதைச் செய்வதற்கல்ல - நீங்கள் - நான் விரும்புகிறேன், ஆனால் அந்தப் படத்தை வைத்திருக்கக் கூடிய நீங்கள் எல்லாரும், எழுதப்பட்டுள்ள அந்த விளக்கத்தையும் வைத்திருக்கிறீர்கள். அது அற்புதமானது. இப்பொழுது, அந்த அதே ஜீவன், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் என்று விஞ்ஞான உலகத்தால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருக்கிற அது, அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே, நான் உங்கள் ஒவ்வொருவர் முன்பாகவும் நிற்கும் போது, சரியாக இப்பொழுது, அது நான் இருக்கிற இடத்திலிருந்து மூன்று அடி தூரத்திற்குள் தான் நின்று கொண்டு இருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது... இப்பொழுது, அது இன்னுமாக எனக்குள் வரவில்லை, ஆனால் அது இங்கே நின்று கொண்டிருக்கிறது, அது ஒருக்கால் சற்று நேரத்தில் எனக்குள் வரும். பகுத்தறிதலைச் செய்வது அது தான். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, அவர் இங்கே இருக்கிறார். கர்த்தருக்கு நன்றி. 61. இப்பொழுது, நான்... சீமாட்டியே, இன்றிரவு இங்கே இந்த மேடையில் நீ தான் முதலாவது இருக்கிறாய், நான் உனக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன், அப்படித்தான் நான் கருதுகிறேன். இப்பொழுது, நம்முடைய கர்த்தர்... மேலே எழுந்தருளிப் போன போது. அவர் எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தார், அவர் ஒரு,... ஒரு நோக்கத் திற்காக சமாரியா வழியாக போனார். பிதாவானவர் அவரிடம் கூறினது போன்று அவர் செய்ததாக அவர் கூறினார். பிறகு, அங்கே உட்கார்ந்து, அவர் சமாரியா ஸ்திரீயை சந்தித்தார். (அது இன்றிரவு ஒரு--ஒரு கறுப்பின பெண்மணியைப் போன்று இருக்கிறது. பாருங்கள்?) அவர், 'தாகத்துக்குத் தா' என்று கேட்டார். வேறுவழியில், யூதர்கள் சமாரியர்களோடு எந்த கொடுக்கல் வாங்கல் விவகாரங்களையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள், அவர்கள், 'ஏன், உம்மோடு எந்த கொடுக்கல் வாங்கல் விவகாரங்களையும் வைத்துக் கொள்வது வழக்கமில்லையே' என்றனர். அவர்கள் எந்த... யையும் கொண்டிருக்காமல் இருந்தார்கள். ஆனால் அந்த இனக்கட்டுப்பாடு இல்லாமலாகி விட்டது என்று அவர்கள் அறிந்து கொள்ளும்படி அவர் செய்தார். அவர் சொன்னார் - அவர், 'நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை மாத்திரம் நீ அறிந்து இருந்தாயானால், குடிப்பதற்காக நீயே என்னிடத்தில் கேட்டிருப்பாய்' என்றார். அந்த உரையாடல் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அவள் ஏதோவொரு மகத்தான நபரின் அருகில் தான் நின்று கொண்டிருந்தாள் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். பிறகு, சற்று கழிந்து, அவர் அவளிடம் சிறிது நேரம் பேசின பிறகு, அவளுடைய மனுஷீக ஆவியை அவர் பிடித்துக் கொண்டு, அவளுடைய பிரச்சனை எங்கே இருந்தது என்பதை அவர் கண்டு கொண்டார், அவரோ ஞானதிருஷ்டிக்காரர்களுடைய இராஜாவாக இருந்தார். அவர், 'போய், உன்னுடைய புருஷனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அவள், 'எனக்குப் புருஷனில்லை' என்றாள். 'உனக்கு ஐந்து புருஷர்கள் இருக்கிறார்கள்' என்றார். அவர் சரியாக நேராக அவளுடைய பிரச்சனைக்கே சென்றார். 62. இப்பொழுது, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருப்பாரென்றால்; நீ இங்கே ஏதோவொரு நோக்கத்திற்காக நின்று கொண்டிருக்கிறாய். எனக்குத் தெரியாது; அதை அறிந்து கொள்ள எனக்கு எந்த வழியும் இல்லை. நீ வெறுமனே இங்கே மேலே நடந்து வந்த ஒரு பெண்மணியாக இருக்கிறாய், ஆனால் அவருக்கு அது தெரியும், அவருக்குத் தெரியாதா? நல்லது - அவர் - நான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அவரைக் குறித்து சரியான காரியங்களைக் கூறியிருப்பேனென்றால்... அவருடைய உயிர்த்தெழுதலின் ஒரு சாட்சிக்காகவே போய் இதைச் செய்யும்படியாக அவர் என்னிடம் கூறினார் என்று நான் கூறினேன், அப்படியானால் அவர் அதைச் செய்கிற வராயிருந்தால், நீ என்னுடைய வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாய். அப்போது அவர் அதைக் கூறுவாரானால், அது அவருடைய வார்த்தையாக உள்ளது. அது சரி தானே? அவர் பேசி அது சத்தியம் என்று கூறும் வரையில் என்னுடைய வார்த்தையை சந்தேகிக்க உனக்கு - உனக்கு ஒரு உரிமை உண்டு. அது சரிதானே? கூட்டத்தினருக்கும் அதே விதமான (உரிமை) உண்டு. என்னுடைய வார்த்தையை சந்தேகிக்க உனக்கு உரிமை உண்டு, ஆனால் அவர் எதையாகிலும் கூறும் போது, அவரைச் சந்தேகிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவரைச் சந்தேகிப்பது பாவமாகும். 'போ, இனி மேல் பாவம் செய்யாதே, அல்லது மிக மோசமாக காரியங்கள் உன் மேல் வரும்...' 63. இப்பொழுது, சகோதரியே, நான்--நான் தொடக்கப் பள்ளி, ஏழாம் வகுப்பு படித்தவன். நான்--நான் ஒரு மனநல மருத்துவரும் (psychiatrist) அல்ல. நான்-நான் தேவனுடைய ஊழியக்காரன், அது-அது உண்மை. ஜனங்கள் கூறுவது போன்று நான் ஜனங்களுடைய மனங்களைப் படிப்பவனல்ல. பாவமும் மற்றும் காரியங்களும் ஏன் வெளிப்படுகின்றன, ஏறக்குறைய அநேக வருடங்களுக்கு முன்னே அவர்கள் மறந்து விட்ட காரியங்களும், அவர்கள் நினைத்தும் பார்த்திராத அந்தக் காரியங்களும் வெளியரங்கமாகின்றனவே. ஆனால் இயேசு அதே காரியத்தைச் செய்தார் (பாருங்கள்?), அவர்களோ அவரை பெயல்செபூல் என்றனர். எனவே அதற்கும் குறைவான எதாகவும் (நான்) அழைக்கப்பட என்னால் எதிர்பார்க்க முடியாதே, என்னால் முடியுமா? ஆனால் நீ இன்றிரவு ஒரு விசுவாசியாக இங்கேயிருக்கிறாய். நீ இங்கே இருக்கிறாய், நீ அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறாய் என்று அறிந்து கொண்டதை இப்பொழுது ஒப்புக் கொள்கிறாய், நானல்ல (நான் உன்னுடைய சகோதரன்), ஆனால் அவருடைய... இப்பொழுது, நீ நரம்புத் தளர்ச்சியினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாய். நீ கடுமையான நரம்புத் தளர்ச்சி உடைய ஒரு நபர். அதன் பிறகு ஒரு பெரிய கட்டிக்கு செய்ய வேண்டிய ஒரு அறுவை சிகிச்சை உனக்கு விரையில் நடக்க இருக்கிறது. அது வயிற்றின் உட்புறத்தில் இருக்கிறது. அந்தக் காரியங்கள் உண்மையாக உள்ளன. அது என்னுடைய சத்தமல்ல; அது அவருடைய சத்தமாக உள்ளது. இப்பொழுது, அதைச் செய்யும்படியாக அவர் இங்கே நின்று கொண்டிருப்பாரென்றால், இப்பொழுது அவரை உன்னுடைய சுகம் அளிப்பவராக ஏற்றுக் கொள்வாயா? நீ சற்று நேரம் இங்கே வருவாயா? பரலோகப் பிதாவே, உமது ஆவி இங்கே இருக்கையில், நீர் அருகில் இருக்கிறீர் என்று இந்தப் பெண்மணி உணருகையில், நீர் அவளைச் சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், சத்துரு அவளை விட்டுப் போவானாக. சாத்தான் கொண்டிருந்த ஒவ்வொரு உரிமையையும் அவனை விட்டுப்பறித்து, அவனைக் கல்வாரியில் தோற்கடித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் வந்து இந்த சத்துருவுக்கு சவால் விடுகையில், அது போகும்படி நான் கூறுகிறேன். சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்தப் பெண்மணியை விட்டு வெளியே வா. ஆமென். 64. விசுவாசம் கொண்டிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்; அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இப்பொழுது, ஒவ்வொருவரும், உங்களால் கூடுமானமட்டும் பயபக்தியாயிருங்கள். சீமாட்டியே, முன்னே வருவாயா, கொஞ்சம் அருகில் வருவாயா? அந்த--அந்த அபிஷேகமானது நமக்கிடையே வரும் போது, போதுமான அளவு நீ அருகாமையில் இருக்கவே நான் விரும்புகிறேன்... பார்? அங்கே வெளியே பெருங்கூட்டம் ஜனங்கள் இழுத்துக் கொண்டும், அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள், அது உனக்குத் தெரியும், அதுதான் அநேக நேரங்களில் அது என்னை விட்டு போகும்படி செய்கிறது. மேலும் நான்... வரிசையில் வைத்திருக்க நான் விரும்புகிற காரணம் என்னவென்றால், சிறிது நேரத்தில் வரிசையின் பெரும் பாகத்தினரை முடிக்கிற அளவுக்கு என்னால் கூடுமானால், அது கூடுமானால்... இப்பொழுது, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோமா? ஒருவரையொருவர் நமக்குத் தெரியாதா? ஆனால் கர்த்தராகிய இயேசு நம் இருவரையுமே அறிந்திருக்கிறார். இப்பொழுது, அவர் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறவராக இங்கே நின்று கொண்டிருப்பாரென்றால், பிதாவா-னவர் அதை வெளிப்படுத்துவது போன்றே உன்னுடைய ஜீவியத்தை அவர் அறிந்திருப்பார், அது உண்மை தானா? அவர் செய்த அதே காரியத்தை அவருடைய ஞானதிருஷ்டிக்காரர்களும் செய்வார்கள் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், அது சரிதானா? 'நான் செய்கிற காரியங்களை...' 65. அதன் பிறகு தேவன் சபையில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை போதகர்களாகவும், சிலரை சுவிசேஷகர்-களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், சபையின் பரிபூரணத்திற்காக எல்லாரையும் நியமித்திருக்கிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா? உன்னை அமைதிப்படுத்தும்படியாக நான் உன்னிடம் மாத்திரமே பேசிக் கொண்டு இருக்கிறேன். நீ சற்று நடுக்கமுற்றவளாய் இங்கே நின்று கொண்டு இருக்கிறாய். ஆனால் எதுவுமே உனக்குத் தீங்கு விளைவிக்காது. அது எல்லாமும் நன்மைக்கே. என் அன்பு சகோதரியே, இப்பொழுது ஏதோவொன்று உன்னை நோக்கி அசைந்து கொண்டிருக்கிறது என்பதை நீ உணர்ந்து கொள்கையில், நீ காண்கிற அந்தப்படம், தேவனுடைய கிருபையின் பால் போன்ற வெண்மை நிற ஒளி வட்டம் தான் இப்பொழுது நமக்கு இடையில் இருக்கிறது. நீ என்னிடமிருந்து போய்க் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். நீ ஒரு ஆபத்தான, அபாயகரமான நிலையில் இருக்கிறாய். உனக்கு புற்று நோய் உள்ளது. அந்தப் புற்று நோய் உன்னுடைய (சரீரம்) முழுவதும் இருக்கிறது. அப்படியானால் நீ... ஒரு மருத்துவர் ஏதோவொரு விதமான ஒரு--ஒரு மருத்துவ சோதனை அல்லது பரிசோதனையை செய்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அவர் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறார் - ஒரு வலது நுரையீரலைக் குறித்து ஏதோவொன்றுள்ளது. வலது நுரையீரலில் ஒரு மங்கலான தன்மைக் காணப்படுகிறது; அதுதான் வலது நுரையீரலில் உள்ள காசநோயாகும். நீ இங்கே தொலைவிலிருந்து வந்திருக்கிறாய். நீ ஒரு பட்டணத்திலிருந்து வந்திருக்கிறாய், நான் - அது இந்தியானாவில் இருந்து, இந்தியானாவிலுள்ள கோகோமோவிலிருந்து. அருகில் வா. சர்வவல்லமையுள்ள தேவனே, சபைக்கான இந்நாளின் போஜன பலியே (meal Offering)... மரித்துக் கொண்டிருக்கிற இந்தப் பரிதாபமான நபர் இங்கே நின்று கொண்டு, ஜனங்களின் இருதயங்களிலுள்ள இரகசியங்களை வெளிப்படுத்தவும், சத்தியம் எதுவென்று அறியச் செய்யும்படியாகவும், சாவுக்குரிய சரீரத்தினூடாக அசைந்து கொண்டிருக்கிற ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவனை இந்நேரத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறாள். பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். உம்முடைய ஊழியக்காரனாகிய எலியா, அந்தப் போஜன பலியை அப்பானையில் போட்டு, அது அதை மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாற்றிப் போட்டது போல, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தப் பெண்மணியின் மேல் என்னுடைய கரங்களை வைக்கிறேன். அவருடைய ஆவியானவர் தாமே இந்த மரணத்தை ஜீவனுக்கு மாற்றி, உம்முடைய மகிமைக்காக அவள் பிழைப்பாளாக. நான் சத்துருவைக் கடிந்து கொண்டு, அது அவளை விட்டுப் போகும்படி கேட்கிறேன், அவள் அவருடைய மகிமைக்காக, தேவ குமாரனாகிய இயேசுவின் மூலமாக ஜீவிப்பாளாக. ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. களிகூர்ந்து கொண்டே போ. இப்பொழுது, உன்னுடைய சாட்சியை எனக்கு எழுது. 66. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். ஐயா, அவர் உம்முடைய ஜெபத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். நான் உம்மிடம் எதையாகிலும் கூறும்படி தேவன் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள், ஏனென்றால் ஜெப வரிசையில் வருவதற்கு உமக்கு ஒரு வாய்ப்பும் கிட்டவில்லை. நீர் ஒரு எலும்பு முறிவினால் அவதிப்படுகிறீர்கள். இப்பொழுது உம்முடைய காலூன்றி எழுந்து நில்லும். இங்கே இந்த வரிசையின் கடைசியில் இருக்கும் இந்த மனிதர். எழுந்து நில்லுங்கள். ஐயா, உம்முடைய எலும்பு முறிவு இப்பொழுதே உம்மை விட்டுப் போகிறது. நீர் உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப் போகலாம். அவர் உம்முடைய ஜெபத்தைக் கேட்டு இருக்கிறார். உம்முடைய விசுவாசம் உம்மை சுகமாக்கிற்று. இயேசு கிறிஸ்து உம் மேல் இரக்கமாயிருக்கிறார். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 67. இது... வணக்கம்? செய்யப்பட்டதாக நீங்கள் கண்டு கொண்டிருக்கிற அந்தக் காரியங்கள் தேவனாகிய கர்த்தரிடமிருந்து வருகிறதென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருடைய பிரசன்னமானது நீங்கள் இப்பொழுது உணருகிற அந்த அபிஷேகம் தான் என்று விசுவாசிக்கிறீர்களா? அது அவர் தான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரையில், உங்களை எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். நாம் அவ்வாறு தான் இருக்கிறோம். நீங்கள் இருதய கோளாறினால் அவதிப்பட்டு வருகிறீர்கள். உமக்கு இருதய (வியாதி) உள்ளது. நீங்கள் பட்டணத்திலிருந்து வருகிறீர்கள். நீங்கள் ஐயோவாவிலிருந்து வருகிறீர்கள் என்று நம்புகிறேன். அது சரி தானா? நீங்கள் - நான் உங்களை ஒரு இடத்தில், ஒரு மருத்துவமனையில் அல்லது ஏதோவொரு விதமான... (இடத்தில்) பார்க்கிறேன். அது இரண்டு முறை திரும்பத் திரும்ப வருகிறதை நான் காண்கிறேன். அது உங்களுக்குச் செய்யப்பட்ட இரண்டு அறுவை சிகிச்சைகள். அதில் ஒன்று, நீங்கள் ஒரு விபத்திற்குள்ளானீர்கள்: மருத்துவர் (அறுவை சிகிச்சை) செய்தார், அவர் சிறு நீர்ப்பையில் துளையிட்டார். அது உண்மை. அருகில் வாருங்கள். இரக்கமுள்ள பிதாவே, இன்றிரவு எங்கள் சகோதரி நின்று கொண்டு இருக்கையில், நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த பொல்லாத, விபச்சார தலைமுறையில், இக்காரியங்களை அறிவிக்கும்படியாக, தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை உயிரோடெழுப்பின யேகோவா தேவனுடைய அபிஷேகத்தின் கீழாக இங்கே இருக்கிறார்கள், தேவனே, அவளுடைய சரீரத்தை விட்டு வியாதியையும் நோயையும் எடுத்துப் போட்டு அவளை சுகப்படுத்த வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நான் அவள் மேல் எனது கரங்களை வைத்து, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவளுக்கு சுகத்தைக் கேட்டுக் கொள்கையில், இந்தப் பொல்லாங்கை நான் கடிந்து கொள்கிறேன். ஆமென். 68. எனது சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஏதோவொன்று சம்பவித்தது என்று உனக்கு-உனக்குத் தெரியும், இல்லையா? பாருங்கள், சகோதரியே, அங்கே தான் ஜெயம் இருக்கிறது. பாருங்கள், நான் வெறுமனே உங்கள் சகோதரன் தான். ஆனால் இப்பொழுது, அந்தத் தரிசனம் என்னவென்று எனக்கு நினைவில்லை, ஏனென்றால் அது உடனடியாக என்னை விட்டு அகன்று விட்டது. நான் - ஒலிநாடா ஒலிப்பதிவிலிருந்து அதை எடுத்துக் கொள்கிறேன், ஆனால் (பாருங்கள்?) அது என்ன - அவர் உங்களிடம் என்ன கூறியிருந்தாலும் - அதைக் குறித்து எதுவுமே எனக்குத் தெரிந்திராத ஏதோவொன்று: சம்பவித்த காரியங்கள் அல்லது வேறு ஏதோவொன்று, எனக்கு அதைக் குறித்து எதுவும் -எதுவுமே தெரியாது. ஆனால் அது உண்மை என்று உனக்குத் தெரியும், இல்லையா? அது முற்றிலும் தவறிப்போகாத சத்தியமாய் உள்ளது. நல்லது அப்படியானால், ஒரு ஆவி என் மேல் இருந்து நான் அக்காரியங்களைக் காணும்படி செய்யுமானால், அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவி தான் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அவர், 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்களானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்' என்று கூறினாரே. நீங்கள் சுகமடைந்திருக்க வேண்டும், இல்லையா? இப்பொழுது, நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள். உங்களிடம் என்ன கோளாறு இருந்திருந்தாலும், இப்பொழுது அதெல்லாமே உங்களைச் சுற்றிலும் வெண்மை நிறமாக இருக்கிறது. நீங்கள் களிகூர்ந்து கொண்டும், சந்தோஷத் தோடும், தேவனைத் துதித்துக் கொண்டும் உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 69. சரி. அந்தச் சீமாட்டியை அழைத்து வாருங்கள். வணக்கம்? அங்கே உங்கள் கழுத்தைச் சுற்றிலும் அந்தச்சிறு சிவப்புநிறக் காரியத்தைக் கொண்டு அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரியே, நீங்கள் விசுவாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அதைக் கண்டேன்- சென்ற இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் அவரை நான் கண்டேன்... அவர் உங்களுக்கு அருகில் இருக்கிறதை நான் காண்கிறேன். இப்பொழுது, நீங்கள் அவதிப்பட்டு வருகிறீர்கள், சரியாக உங்களுக்கு முன்பாக அமர்ந்திருக்கும் அந்தச் சீமாட்டியும் அதே காரியத்தினால் அவதிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் அதை எனக்கு வெளிப்படுத்த முடியும், அவரால் முடியாதா? நீங்கள் ஜெபித்துக் கொண்டு, விசுவாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆமாம், அது இரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும் கடினத்தன்மை தான். அது உண்மை. உங்களுக்கு முன்னால் இருக்கிற அந்த சீமாட்டிக்கும் அதே காரியமே உள்ளது. அது சரியல்லவா, சீமாட்டியே? அந்தப் பிசாசுகள் ஒன்று மற்றொன்றை நோக்கி போய்க் கொண்டிருக்கிறதைப் பார்க்கிறீர்களா? அது அப்படியே ஒரு கறுத்த கீற்று (black streak) ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குப் போவது போன்றதாகும். இப்பொழுது, வெள்ளை நிற ஜாக்கட்டை அணிந்து கொண்டு, முன்பக்க இருக்கையில் இருக்கும் சீமாட்டியே, உன்னுடைய கரத்தை மேலே உயர்த்து. பின்பக்க இருக்கையில் இருக்கும் நீங்கள் தான், சகோதரியே - கையால் அவர்களைப் பிடித்துக் கொள்கிறீர்களா. உங்கள் கரத்தை ஒருவர் மேல் ஒருவர் வைத்துக் கொள்ளுங்கள். இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, நான் இப்பொழுது ஜெபிக்கிறேன், அந்தப் பிசாசுகள், தங்கள் மேல் வரும் தேவனுடைய நரக கோபத்துக்கு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்படியாக முயற்சித்துக் கொண்டு இருக்கையில், அவைகளால் அதைச் செய்ய முடியாது. அசுத்த ஆவியே, அந்த பெண்மணிகளை விட்டு வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், போகும்படி உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ போ. ஆமென். இப்பொழுது, என்னுடைய சகோதரிகளே, இந்நேரத்தில் உங்களிடம் என்னால் கூற இயலாது, ஆனால் அது - உங்களுடைய விசுவாசம் தான், அந்தக் காரியம் தான் உங்களை நோக்கி என்னை இழுத்தது, உங்கள் மேல் தொங்கிக் கொண்டிருந்த அந்த இருளானது உங்கள் இருவரையும் விட்டு அகன்று விட்டது. பாருங்கள்? இப்பொழுது போகலாம், தேவன் உங்களோடு இருந்து, உங்களை சுகப்படுத்துகிறார். 70. வணக்கம்? நீங்கள் அந்த சீமாட்டி... ஜெபிக்கப்பட வேண்டிய சீமாட்டி இவர்கள் தானா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் என்று நினைக்கிறேன்? நம்முடைய சகோத... நாம் சகோதரிகள் இல்லையா? உங்களுக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுவுக்கு நம் இருவரையுமே தெரியும். நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மைப் போஷித்தவர் அவரே. நீங்கள் ஏதோவொன்றிற்காக உதவியைப் பெற்றுக் கொள்ளும் படியாக, அது போல என்னிடம் வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் ஒரு கிறிஸ்தவர்களாயிருக்கிறீர்கள், உங்களுக்கு தேவையோ, அல்லது ஏதோவொரு விதத்தில் ஒரு கிறிஸ்தவளாய் இருக்கும்படியான தேவைக்காகவே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் நீங்கள் இங்கே வரவில்லை என்று எனக்குத் தெரியும். இப்பொழுது, யாரோ ஒருவர் உங்களுக்கு அருகில் இருப்பதை நான் காண்கிறேன். அது சுகமாக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிற யாரோ ஒருவர். அது மிகவும் பிடித்த ஒருவள். அவள் ஒரு சிறு பெண். அது--அது--அது தான் உங்கள் மகள், அவள் ஒரு சுரப்பி கோளாறினால் அவதிப்படுகிறாள். பிறகு நீங்கள்... அதிகமான கால இடைவெளி கடந்து போகிறதை நான் காண்கிறேன், அங்கே ஒரு- யாரோ ஒருவர் அருகில் இருக்கிறார். அது எங்கேயோ உள்ள ஒரு சபையோடு சம்பந்தப்பட்டவர்கள். அது ஒரு - அது ஒரு ஊழியக்காரரின் மனைவி, அவர்கள் நீரிழிவு நோயினால் அவதிப்படுகிறார்கள். அது ஓஹியோவில் உள்ளது. இங்கே வாருங்கள். இந்தக் கைக்குட்டை அவர்களுக்குத் தான். பிதாவே, இந்தக் காட்சியை நீர் கீழே நோக்கிப் பார்க்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன், கர்த்தாவே, நீர் இவர்களை சுகமாக்கி, இந்தக் கைக்குட்டைகள் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்கிறேன், உம்முடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்கள் முழுவதுமாக சுகமாவார்களாக. ஆமென். பயப்படாதீர்கள். அவர்கள் மேல் இதை வையுங்கள், எல்லாம் சரியாகி விடும். நீங்கள் சந்தேகப்படவே படாதீர்கள். வெறுமனே விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? 71. அங்கே உட்கார்ந்து என்னையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிற சகோதரியே, நீங்கள் கீல்வாதத்தினாலே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர் கள், இப்பொழுது உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது; நீங்கள் வீட்டிற்குச் சென்று சுகமாயிருக்கலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள்... ஐ கொண்டு வருவீர்களா. வாலிபனே, வணக்கம். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? மற்ற அநேக ஊழியக்காரர்கள் இங்கேயிருக்கிறார்கள், ஆனால் நான் அவருடைய ஊழியக்காரனாக இருக்கிறேன். உடனடியாக, அங்கே ஒரு ஆவியானது இந்த வாலிபனிடமிருந்து இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பையன் தொல்லையில் அகப்பட்டுள்ளான், அவன் கடுமையான பிரச்சனையோடு இருக்கிறான். இந்தப் பையன் மனநிலை கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். நீ ஒரு மனநிலை மருத்துவமனையிலிருந்து இப்பொழுது தான் வருகிறாய். அவர்கள் ஏதோவொரு விதமான ஒரு--ஒரு அதிர்ச்சி சிகிச்சையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அவர்கள் உனக்கு அதிர்ச்சி சிகிச்சையை கொடுத்திருக்கிறார்கள். உனக்கு இயற்கைக்கு மாறான ஒரு பயம் தொடர்ந்து (aphobia) இருக்கிறது: அதாவது, நீ எல்லா நேரமும் உனக்கு முன்பாக ஒரு முகத்தைப் பார்க்கிறாய். அது ஒரு- அது நீ காண்கிற உனது தாயாரின் முகம் தான். உனக்கு விவாகம் ஆகி விட்டது. உனக்கு ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். கேதரா தேசத்து மனிதனிடம் வந்து, அம்மனிதனை விடுவித்தவராகிய இயேசு கிறிஸ்து உன்னை இதிலிருந்து விடுவித்து, அந்த இயற்கைக்கு மாறான பயத்தை உன்னிலிருந்து எடுத்துப் போட்டு, அந்தப் பிசாசை உன்னை விட்டுத் துரத்தும்படி இன்றிரவு இங்கேயிருக்கிறார், நீ சுகத்தோடு உன்னுடைய வீட்டிற்கு திரும்பிச்செல்லலாம். நீ அதை விசுவாசிக்கிறாயா? உனக்காக இதைச் செய்யவே அவர் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? 72. நீங்கள் உங்கள் தலைகளை தாழ்த்தி பயபக்தியோடு இருங்கள். இது மிகவும் ஆபத்தானதும், அபாயகரமானதுமாய் இருக்கிறது. 'உங்கள் தலையை உயர்த்துங்கள்' என்ற என்னுடைய சத்தத்தை நீங்கள் கேட்பது வரையில், உங்கள் தலையைத் தொடர்ந்து தாழ்த்தி வைத்துக் கொள்ளுங்கள். வாலிபனே, இங்கே வா. இந்த ஆசீர்வாதத்தை நான் கேட்கிறதற்கு முன்னால், நான் ஒரு காரியத்தை உன்னிடம் கேட்கப் போகிறேன். அவருடைய ஊழியக்காரனாக எனக்கு நீ கீழ்ப்படிந்து, செய்ய வேண்டுமென்று நான் உன்னிடம் கூறுகிறபடி நீ செய்வாயா? நீ சுகமடையப் போகிறாய். விடுதலையின் நேரம் சமீபமாயுள்ளது. வாலிபனே, இதைச் செய்து கொண்டிருப்பது ஒரு பிசாசு தான். அவன் உன்னை முற்றிலும் பைத்தியம் பிடித்த நிலைக்கு உன்னைத் தள்ளி, உன்னுடைய எஞ்சியுள்ள வாழ்நாட்களில் அதேவிதமாவே உன்னை வைத்திருப்பான், ஆனால் உன்னுடைய சரியான மனநிலைக்கும், சரியான புத்தி தெளிந்த நிலைக்கும் உன்னைத் திரும்பவும் கொண்டு வர தேவனால் கூடும். நான் வேறொரு காரியத்தைக் காண்கிறேன். நீ மனநோய் மருத்துவர்க ளிடம் இருந்திருக்கிறாய். அவர்கள் - யாரோ ஒருவர் உன்னிடம் பேச முயற்சி செய்வதை நான் பார்க்கிறேன், ஆனால் அது (நல்ல) யோசனை அல்ல. உனக்கு அதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது: அதற்கு ஜீவனுள்ள தேவனுடைய வல்லமை அவசியமாயுள்ளது. நான் கூறுவது உனக்குப் புரிகிறதா? உனக்குப் புரியவில்லை என்றால், சற்று நேரத்தில் நீ புரிந்து கொள்வாய். பயபக்தியோடு உன்னுடைய தலையைத் தாழ்த்தி, உன்னை விடுவிக்கும்படியாக தேவனுடைய குமாரனாகிய இயேசுவை தேவன் எழுப்பினார் என்று விசுவாசி. 73. பரலோகப் பிதாவே, இங்கே நின்று கொண்டிருக்கும் இந்த வாலிபன் அருமையான தோற்றம் கொண்ட ஒரு வாலிபனாயிருக்கிறான், வாலிப மனிதத் தன்மையின் சிற்பமாக இங்கே நின்று கொண்டிருக்கிறான், அவனுடைய வீட்டை சுக்கு நூறாக கிழித்துப் போட்டு, அவனுடைய குடும்பத்தை உடைத்துப் போட்டு, இந்த வாலிபனை பைத்தியம் பிடிக்கும்படி செய்யவே சாத்தான் அவனிடம் வந்திருக்கிறான். ஆனால் ஓ தேவனே, வானங்களையும் பூமியையும் உண்டாக்கினவரே, கிறிஸ்து இயேசு மூலமாய் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரே, நான் இந்த வாலிபனுக்காக விசுவாசமுள்ள ஜெபத்தோடு உம்முடைய ஊழியக்காரனாக வருகிறேன், அவன் இருக்கிற நிலைமையின் காரணமாக அவனாகவே விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதை சற்று முன்பு அறிந்து கொண்டேன். கர்த்தாவே, உமது ஊழியக்காரனின் ஜெபத்தைக் கேட்டருளும். சாத்தான் அவனிடத்தில் பதுங்கியிருந்து, அவனுடைய வாழ்க்கையை ஒரு துயரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறான், ஆனால் அந்த பைத்தியக்காரனை விடுவித்த கர்த்தராகிய இயேசு, அது இந்த வாலிபனுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக மோசமாக இருந்தது. இன்றிரவு, உம்மால் இந்த வாலிபனை சுகப்படுத்த முடியும். சாத்தானே, இவனைக்கட்டி வைத்திருக்கிற நீ, மனநல மருத்துவர்கள் இடமிருந்து தப்பித்து விட்டாய்; நீ மருத்துவ சிகிச்சைகளிலிருந்தும் தப்பித்து விட்டிருக்கிறாய்; ஆனால் தேவனுடைய வல்லமையிடமிருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவனை விட்டு வெளியே வா. அவனை விட்டுப் போ. இப்பொழுது, வாலிபனே, இங்கே பார். அது முடிந்து விட்டது; நீ சுகமடைந்து விட்டாய். இனிமேல் புகைபிடிக்காதே. ஒரு உண்மையான கிறிஸ்தவனைப் போன்று ஜீவி. போ, தேவனைத் துதித்துக் கொண்டும், இரவும் பகலும் அவருடைய துதிகளைப் பாடிக் கொண்டும் இரு. உன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, நீ சுகமடைந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்து. இப்பொழுது, நீ - நீ நலமாக உணருகிறாய், இல்லையா? இவன் அருமையாக உணருவதாக இந்த வாலிபன் கூறுகிறான். இப்பொழுது, எல்லாம் போய் விட்டது, அது போன போது, ஒரு அசுத்த ஆவி அந்தவிதமாக போனது. நான் ஒரு மதவெறியன் அல்லவென்று பரலோகத்திலிருக்கிற தேவன் அறிவார், அவரே நியாயத்தீர்ப்பின் நாளிலே நியாயம் தீர்ப்பார். அந்தக் காரியமானது வேகமாக சுழன்றபடி, இந்தப் பையனை விட்டு அந்தத் திசையில் கடந்து சென்றது. அது அவனை விட்டுப் போன போது, வீசும் காற்று, 'ஷ்ஷ்ஷ்ஷ்' என்று அவ்விதமாக போவதைப் போன்று கூட அது உணரப்பட்டது. அந்த அசுத்த (ஆவியின்) வல்லமைகள் இந்த வாலிபனை விட்டு அகன்று விட்டது. போ, உன்னுடைய மனைவியிடமும், குடும்பத்திடமும் சென்று, களிகூர்ந்து கொண்டே சந்தோஷமாயிரு. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. 74. அந்த சீமாட்டியை அழைத்து வாருங்கள். (ஒரு அசுத்த ஆவி) காரியமானது காணக்கூடிய விதத்தில் யாரோ ஒருவரை விட்டு கடந்து போனதை நான் நீண்ட காலமாக பார்த்தது இதுதான் முதல் தடவை. அது ஒரு வெளவால் (bat) போன்று கடந்து சென்றது, அவ்விதமாக ஒரு பக்கத்திலிருந்து கடந்து போனது) சீமாட்டியே, இங்கே வாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் எல்லாரிடத்திலும் இரக்கமாயிருக்கிறார். அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் இரத்தமானது நம்மை மூடி, சகல பொல்லாத வல்லமைகளிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பதாக. இயேசு அற்புதமானவர். தேவனே, இரக்கமாயிருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. சரி, சீமாட்டியே. நீங்கள் ஸ்திரீகளுக்குள்ள கோளாறினால் பயங்கரமான விதமாக அவதிப்பட்டு வருகிறீர்கள். நீங்கள் ஒரு மருத்துவரிடம் போய் இருந்தீர்கள். அவர் உங்களை பரிசோதித்து, உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப் போகிறார். ஸ்திரீகளுக்கான உறுப்புகள் எல்லாமே முழுவதுமாக பாதிக்கப்பட்டு, அவைகள் கட்டாயமாக அகற்றப்பட்டே ஆக வேண்டும். உங்கள் மருத்துவர் அதைத் தான் கூறியிருக்கிறார். இன்றிரவு கர்த்தராகிய இயேசு அதைக்குறித்து (என்ன)நினைக்கிறார் என்று எண்ணிப் பார்த்தீர்களா? அருகில் வாருங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, மரித்தோரிலிருந்து இயேசு கிறிஸ்துவை உயிரோடெழுப்பினவரே, இன்றிரவு உமது ஊழியக்காரனுடைய ஜெபத்தைக் கேட்டருளும். இந்த அசுத்த (ஆவியானது) இந்தப் பெண்மணியை விட்டு விலகி, தேவனுடைய மகிமைக்காக அவள் சுகமடைய வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. போய், சந்தோஷமாயிரு, களிகூர்ந்து கொண்டே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு துதியை செலுத்து. 75. சற்று பொறுங்கள். அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஐயா, உம்முடைய கைகளிலும் உம்முடைய சரீரத்திலும் சொறி போன்று ஏற்பட்டிருக்கிறது. உமது கண்ணிலும் கூட ஒரு சதை வளர்ச்சி உண்டாகி இருக்கிறது. கர்த்தர் உம்மைச் சுகமாக்குகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? எழுந்து நின்று உம்முடைய கரங்களை அசைத்துக் காட்டும். அப்படி ஆனால், என்னுடைய சகோதரனே, உம்முடைய விசுவாசம் உம்மைச் சுகமாக்கி விட்டது. நீங்கள் சுகமடைந்தவராக வீட்டிற்குப் போகலாம். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் உம்மிடம் பேசின போது, உமக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஒரு சீமாட்டியின் விசுவாசம் கவனத்தைக் கவர்ந்து கொண்டது. அவர்கள் அதிக இரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கேயிருக்கும் சீமாட்டியே, உங்களை கர்த்தராகிய இயேசு சுகப்படுத்துகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, ஒரு மருத்துவர் உங்கள் கையைச் சுற்றி ஏதோவொன்றை வைத்து, அது அவ்விதமாக கீழே போகும்படி செய்வதை நான் காண்கிறேன். அது மிகத் தீவிரமாக இருக்கிறது. உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படி ஆனால் வீட்டிற்குச் சென்று தேவனுடைய மகிமைக்காக சுகமடையுங்கள். சீமாட்டியே, நீங்கள் அந்த நாற்காலியில் அமருவதற்கு முன்பாகவே, ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே சுகமடைந்து விட்டீர்கள் என்று விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் அவ்வாறு விசுவாசிப்பீர்களானால், களிகூர்ந்துகொண்டே உங்கள் பாதையில் செல்லுங்கள். பிதாவே, இயேசுவின் நாமத்தில், இந்தப் பெண்மணியை விடுவித்து, அவளை சந்தோஷத்தோடு, இயேசுகிறிஸ்துவின் மூலமாய் களிகூர்ந்து கொண்டே போகச் செய்யும். சந்தேகப்படாதீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தவாறு செல்லுங்கள். சரி. 76. சகோதரியே, நீ விசுவாசிக்கிறாயா? நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாய் என்றால், அந்தக்கட்டிக்காக நீ ஒருபோதும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை; அது உன்னை விட்டு போய் விடும். நீ அதை விசுவாசிக்கிறாயா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக அவள் சுகமடைவாளாக. இப்பொழுது இதை அருளும். உன்னுடைய முழு இருதயத்தோடும்... ஒரு ஆபத்தான நோய்: ஒரு நபரைக் கொல்லுகிற புற்று நோய். சரியாக இப்பொழுதே அந்தப் புற்று நோயிலிருந்து இயேசு கிறிஸ்து உன்னைச் சுகமாக்கப் போகிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ அவருடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கிறாய் என்றும் அவருடைய அபிஷேகம் இங்கேயிருக்கிறது என்றும் நீ விசுவாசிக்கிறாயா? அவருடைய கட்டளைக ளுக்குக் கீழ்ப்படியும்படியாக... உன்மேல் கரங்களை வைக்கும் போது, அந்தப் புற்று நோய் மரித்து நீ பிழைத்துக் கொள்வாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை அருளும், இந்தப் பெண்மணி தேவனுடைய மகிமைக்காக சுகமடைவாளாக. ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டே, சந்தோஷத்தோடு களிகூர்ந்தபடியே செல். நோக்கிப் பார் சகோதரியே, உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ விசுவாசிக்கிறாயா? விசுவாசமுள்ளவளாயிரு. (அது மிக மோசமாய் இருக்கிறது, ஆனால் அது விட்டுப்போய் விட்டது.) உன்னுடைய- நீ- உனக்கு கீல்வாதம் இருந்தது, இல்லையா, சீமாட்டியே. ஓ சகோதரியே, நீ ஏன் வேறோரு நிமிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற அந்தச் சீமாட்டியை விட்டுப் போகவில்லை? சரி. களிகூர்ந்து கொண்டே உன்னுடைய பாதையில் செல்; நீ இப்பொழுது சுகமடைந்து விட்டாய், கீல்வாதம் உன்னை விட்டுப் போய் விட்டது. நீ... மேலும் கீழும் கால்களை உதைத்து நட, அப்பொழுது அவர்களால் அதைக் காண முடியும். அதோ, அது போதும். பாருங்கள்? 77. நீ குருடாகப் போவதேயில்லை; நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பாயென்றால், நீ சுகமடைவாய், சுகம் அடைவாயா? உன்னுடைய பார்வை மங்கலாகிக் கொண்டிருக்கிறது, உனக்கு நரம்புத்தளர்ச்சி இருக்கிறது, ஸ்திரீகளுக்குள்ள கோளாறும் உனக்குள்ளது. சற்று நேரம் இங்கே வா. கர்த்தராகிய இயேசுவே, இந்தப் பொல்லாங்கு இவளை விட்டு விலகி, அது இவளை விட்டு (வெளியே) வரட்டும் என்று ஜெபிக்கிறேன், இவள் முழுவதுமாக சுகமடைவாளாக. இந்தப் பெண்ணை கட்டி வைத்திருக்கிற அசுத்த ஆவியே, அவளுடைய காதைச் செவிடாக்கி, இந்த கோளாறுகள் எல்வாவற்றையும் இவளுக்குக் கொடுத்திருக்கிறவனே, நீ அவளை விட்டு வெளியே வந்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவளை விட்டு அகன்று போக வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், வெளியே வா. இப்பொழுது, சற்று பொறுங்கள். உன்னுடைய காதுகளில் எந்த ஒன்று மோசமாயிருந்தது? ஆயினும், இப்பொழுது நான் சொல்லுவதைக் கேட்க முடிகிறதா? அது உண்மை. இப்பொழுது நான் கூறுவதைக் கேட்க முடிகிறதா? ஆம். இப்பொழுது, உன்னுடைய மற்ற கோளாறுகளும் கூட போய் விட்டன. உன்னுடைய காது கேட்கும் திறன் சரியாகி விட்டது, நீ சுகமடைந்து விட்டாய். நீ களி கூர்ந்தபடியே உன்னுடைய பாதையில் போகலாம். ஆமென். 78. தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் கேட்கிற எதையும் பெற்றுக் கொள்வீர்கள். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். ஒரு சின்னஞ்சிறிய குழந்தையை நான் காண்கிறேன்; அது ஒரு குழந்தை. அந்தக் குழந்தையானது ஒரு-- ஒரு... அது ஒரு சிறிய மெக்ஸிகன் குழந்தையா கவோ அல்லது கறுப்பு நிற குழந்தையாகவோ உள்ளது. அந்தச் சிறு குழந்தைக்கு ஒரு எலும்பு முறிவு உள்ளது. அது தான் அது; அது தான் அந்தக் குழந்தை. அது இப்பொழுது... அந்தக் குழந்தை அப்படியே உங்களுக்கு மேலாக உள்ளது. சீமாட்டியே, இவ்விதமாக என்னை நோக்கிப் பார். உன்னுடைய குழந்தைக்கு எலும்பு முறிவு உள்ளது. நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ கத்தோலிக் களாகவும் கூட இருக்கிறாய், இல்லையா? விசுவாசத்தினாலே, நீ ஒரு கத்தோலிக்க (பெண்): நீ ஜெப மாலையின் உருமணிகளை வைத்துக் கொண்டு, 'மரியாளே வாழ்க' என்று கூறிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அங்கே பின்னால் யாரோ ஒருவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்- அங்கே உனக்கு அருகில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான், அவன் ஒரு-- அவனுக்கு ஒரு மகள் இருக்கிறாள், அவளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது, சரியாக அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவர்... அது சரிதான், ஒரு மகள். ஒரு வாலிப பெண்ணின் எலும்பு முறிவுகளையும் நான் காண்கிறேன். இப்பொழுது, நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். ஓ தேவ குமாரனாகிய இயேசுவே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல ஈவையும் அருளுபவரே, இந்த ஜனங்கள் மேல் உமது இரக்கங்களை அனுப்பி, அவர்களைச் சுகமாக்கும். நான் இந்த ஆசீர்வாதத்தைக் கேட்டு, தேவகுமாரனாகிய இயேசுவின் நாமத்தில் சத்துருவைக் கடிந்து கொள்ளு கிறேன். இதை அருளும். ஆமென். போய், மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடு. உன்னுடைய குழந்தை சுகமடையப் போகிறது. 79. நான் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று நீர் விசுவாசிக்கிறீரா? ஐயா, துரிதமாக... உம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிற காரியங்களில் ஒன்று... இக்கணத்தில் நீங்கள்... என்று காண்கிறேன். உமக்கிருக்கிற மிகப் பெரிய தேவை என்னவென்றால், உமது கால்களில் உமக்கு கோளாறு இருக்கிறது. அது சரி அல்லவா? ஒரு காய்ச்சலைப் போன்று தோன்றுகிறது, அது மோசமான விதத்தில் உம்முடைய கால்களுக்குள் வந்திருக்கிறது. உமக்கும்கூட இருக்கிற மிகப் பெரிய தேவை என்னவென்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வத ற்கான தேவை உமக்கிருக்கிறது. அது சரிதானே? நீர் ஒரு பாவியாக இருக்கிறீர், நீர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. நீர் ஒரு ஆசீர்வாதத்திற்காக அவரிடம் வேண்டிக் கொள்ளும்படி வந்திருக்கிறீர். நீர் அவரிடம் கேட்பதற்கு முன்பு, இந்த மணிநேரத்தில் நீர்... இதை உமக்குக் கூறுகிறேன்: நீரும் கூட புகைபிடிக்கிறீர் (நீர் பாரும்?), இப்பொழுது இதைச் செய்து கொண்டிருப்பதால், அது உம்முடைய கால்களில் ஒரு-ஒரு-ஒரு நரம்புக் கோளாறை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பொழுது, இயேசுவை உமது இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அந்தக் கால்கள் வெளிறிப் போய் முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டுப் போவதற்கும் முன்பாக அவர் உம்மை சுகப்படுத்தும்படி அவரை அனுமதிப்பீரா? நீர் அவரை உம்முடைய- உம்முடைய சுகமளிப்பவராக - அல்லது உம்முடைய இரட்சகராக இப்பொழுது ஏற்றுக் கொள்வீரா? அவர் இந்நேரத்திலே உம்முடைய பாவங்களை மன்னித்து விடுவார் என்றும், அவர் சரியாக இங்கேயே உம்மை சுகப்படுத்துவார் என்றும் நீர் விசுவாசிக்கிறீரா? நீர் அவரை ஏற்றுக் கொள்வீரா? நீர் ஏற்றுக்கொள்கிறீர். இப்பொழுது இயேசு கிறிஸ்துவை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறீர் என்ற ஒரு அறிக்கையாக சபையோரை திரும்பிப் பாரும். அவர் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்கிறார். இப்பொழுது, பரலோகப் பிதாவே, இந்த மனிதருடைய அறிக்கையின் பேரிலும், உம்மிடத்திலுள்ள அவருடைய விசுவாசத்தின் பேரிலும், அவர் இப்பொழுதே ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையாக இருக்கிறார், அவர் உம்மிடம் வருகிறார், சத்துரு அவருடைய சரீரத்தை கட்டி, அவருடைய கால்களை முடக்கிப் போட முயற்சித்துக் கொண்டிருக்கிறான். இதைச் செய்த பிசாசை நான் கடிந்து கொள்ளுகிறேன். சாத்தானே, ஜீவனுள்ள தேவனாலே, நீ இம்மனிதனை விட்டு விலகி, இவரை விட்டு அகன்று போகும்படி நான் கட்டளையிடுகிறேன். அவர் இப்பொழுது தேவனுடைய ஊழியக்காரர். உன்னால் இனி மேலும் அவரைப் பிடித்துக் வைத்திருக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவரை விட்டு வெளியே வா. உம்முடைய கால்களை மேலும் கீழும் உயர்த்தும். அது இப்பொழுது போய் விட்டது. உமது கரங்களை மேலே உயர்த்தி, 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறிக் கொண்டே, இந்த மேடையை விட்டுச் செல்லும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... இப்பொழுது, நான் மேடையை விட்டுப் போகிறேன்... 80. நாம், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று கூறுவோம்... சகல ஆசீர்வாதங்களின் நீரோடையாகிய தேவனைத் துதியுங்கள், ஓ இங்கே கீழேயுள்ள சிருஷ்டிகளே, அவரைத் துதியுங்கள், மேலேயுள்ள பரலோகச் சேனைகளே, அவரைத் துதியுங்கள், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை துதியுங்கள். இன்றிரவு பிரதான தூதர்களுடைய துதியும், தூதர்களின் துதியும் அது தான். அவருடைய சபையினுடைய துதியும் அது தான். இன்றிரவு அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனுள்ள வல்லமையானது இக்கட்டிடத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. அவர் எல்லாவற்றையும் குறித்த இரகசியத்தையும் அறியாமல் எதுவும் அவருக்கு முன்பாக கடந்து போக முடியாது. இக்கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு பாவத்தையும் ஒவ்வொரு வியாதியையும் கடிந்து கொள்ளும்படியாக இப்பொழுது நாம் அவருடைய சமூகத்தில் நின்று கொண்டிருக்கிறோம். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இக்கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு அசுத்த ஆவியும் பாவியை விட்டும், பின்வாங்கிப் போனவரை விட்டும், வியாதியஸ்தரை விட்டும், முடமானவர்களை விட்டும், குருடர்களை விட்டும் அகன்று போகும்படியாக நான் கட்டளையிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்கள் கால்களை ஊன்றி நின்று, உங்கள் சுகத்தையும், உங்கள் இரட்சிப்பையும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மகிமையையும் ஏற்றுக் கொள்ளும்படியாக நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக் கொள்கிறேன்.